---Advertisement---

கோவை சின்னியம்பாளையம் மாரியம்மன் கோவில் சேதம் : அண்ணாமலை கண்டனம்

On: June 19, 2025 5:55 AM
Follow Us:
---Advertisement---

கோவை சின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில் சமூக விரோதிகள் புகுந்து பழமையான சிலைகளை உடைத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து (ஜூன் 18) முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில்; புகழ்பெற்ற கோவை சின்னியம்பாளையம்  பிளேக் மாரியம்மன் கோவிலில், நேற்று இரவு, சமூக விரோதிகள் புகுந்து, நூற்றாண்டு கால பழமையான சிலைகளை உடைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தப் பகுதி மக்கள் காலங்காலமாய் வணங்கி வரும் அம்மன் ஆலயத்தின் சிலைகளை உடைத்து, சமூகப் பதற்றம் ஏற்படுத்துவதே நோக்கமாகத் தெரிகிறது.

உடனடியாக, கோவில் சிலைகளை உடைத்த சமூக விரோதிகளை கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதையும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

Leave a Comment