Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • தமிழகத்தை சேர்ந்த 25 பேர் ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு: அண்ணாமலை வாழ்த்து அரசியல்
  • 2026ல் விழித்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் இந்த நாடு தீயவர்களின் கையில் மாட்டிக்கொண்டு சுக்கு நாறாகிவிடும்: ராமநாதபுரத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன் அரசியல்
  • கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: பி.எம்.கிசான் நிதி ரூ.18,000 கோடி விடுவிப்பு தமிழ்நாடு
  • இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி தமிழ்நாடு
  • பிஜியின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்கும்: பிரதமர் மோடி இந்தியா
  • உலகின் வலிமைக்கு ஒரு நம்பிக்கை தூணாக இந்தியா உள்ளது : கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • நடிகர் ராஜேஷ் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • வீடுகள் தோறும் தேசியக்கொடி; திருச்சியில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் தமிழ்நாடு

பெண் பிள்ளைகளைத் தவிக்கவிட்டுவிட்டு, தன் மகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து பாடும் முதல்வர்: நயினார் நாகேந்திரன் காட்டம்

Posted on November 27, 2025November 27, 2025 By வ.தங்கவேல் No Comments on பெண் பிள்ளைகளைத் தவிக்கவிட்டுவிட்டு, தன் மகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து பாடும் முதல்வர்: நயினார் நாகேந்திரன் காட்டம்

பெண் பிள்ளைகளைத் தவிக்கவிட்டுவிட்டு, தன் மகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து பாடுகிறார் முதல்வர் ஸ்டாலின் என மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் இன்று காலை (நவம்பர் 27) பள்ளிக்கு சென்ற அரசுப்பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெண் பிள்ளைகளைத் தவிக்கவிட்டுவிட்டு, தன் மகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து பாடும் முதல்வர்!

திருமணத்திற்கு மறுத்ததால் தஞ்சாவூரில் பள்ளிக்குச் செல்லும் வழியில் பெண் ஆசிரியர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது.

சில நாட்களுக்கு முன், இராமேஸ்வரத்தில், இதே போல காதலிக்க மறுத்த மாணவி ஒருவர் பள்ளிக்குச் செல்லும் வழியில் கொலை செய்யப்பட்ட ரணம் இன்னும் மனதைவிட்டு அகலாத நிலையில், மீண்டுமொரு கொடூரச் சம்பவம் அதே போல நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. பெண்களின் விருப்பு வெறுப்பை மதிக்கக் கூட திராணியற்றுவிட்டதா திமுக ஆட்சியின் கீழுள்ள தமிழ்ச் சமூகம்? தன்னை மறுக்கும் பெண்ணைக் கொலை செய்யும் அளவிற்குக் குற்றவாளிக்கு தைரியம் அளித்தது சீரழிந்த சட்டம் ஒழுங்கா? அல்லது கைகட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறையா?

கற்பழிப்பு, கடத்தல், காதலிக்க மறுத்ததால் கொலை என அனுதினமும் தமிழகத்தில் தொடரும் பெண்களுக்கு எதிரான கொடூரக் குற்றங்களைக் கண்டு, பெண் பிள்ளைகளைப் பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு தவிக்கும் வேளையில், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களோ தனது சொந்த மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து மடல் வாசித்து மகிழ்கிறார். இந்த லட்சணத்தில் இருந்துகொண்டு, ‘‘அப்பா’’ என்ற பட்டத்திற்கு ஆசைப்படுவது வெட்கக்கேடு! இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

அரசியல் Tags:#Bjp, #nainar nagendran, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: திமுகவுக்கு ஒரே அக்கறை துணை முதல்வராக இருக்கும் உதயநிதியை முதல்வராக்க வேண்டும்; தேனியில் நயினார் நாகேந்திரன் பேச்சு

Related Posts

  • திருவள்ளுவரையும், திருக்குறளையும் களவாட நினைப்பதே திமுக கூட்டம்தான்: ஸ்டாலினுக்கு, வானதி சீனிவாசன் பதிலடி அரசியல்
  • மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு அதிகரிப்பதை பொறுக்க முடியாமல் எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 5 பாஜகவினரை கைது செய்த திராவிட மாடல் அரசியல்
  • அப்பாவி மக்களிடம் தொடர்ந்து அதிகார ஆணவத்தைப் பிரயோகிக்கும் திமுக அரசு நிச்சயம் வீழும் : நயினார் நாகேந்திரன் அரசியல்
  • தமிழகத்தை சேர்ந்த 25 பேர் ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு: அண்ணாமலை வாழ்த்து அரசியல்
  • குற்றவாளிகளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல திமுக அரசு தயாராக இருப்பதன் மர்மம் என்ன? தலைவர் அண்ணாமலை அரசியல்
  • 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக : தலைவர் அண்ணாமலை அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • பெண் பிள்ளைகளைத் தவிக்கவிட்டுவிட்டு, தன் மகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து பாடும் முதல்வர்: நயினார் நாகேந்திரன் காட்டம்
  • திமுகவுக்கு ஒரே அக்கறை துணை முதல்வராக இருக்கும் உதயநிதியை முதல்வராக்க வேண்டும்; தேனியில் நயினார் நாகேந்திரன் பேச்சு
  • பிஹாரை போன்று நாளை தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வெற்றி பெறும்; தென்காசியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
  • கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: பி.எம்.கிசான் நிதி ரூ.18,000 கோடி விடுவிப்பு
  • பாலக்கோடு அருகே 3 ஆண்டுகளாக கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் நடக்கும் வகுப்பறை; இடம் வாங்கி கொடுத்தும் கண்டுகொள்ளாத விடியாத அரசு

Recent Comments

No comments to show.

Archives

  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • பாஜக உண்மையான ஜனநாயக கட்சி : திருச்செங்கோட்டில் தலைவர் அண்ணாமலை அரசியல்
  • டங்ஸ்டன் சுரங்கம் அமையாது : விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சரை சந்தித்தபின் தலைவர் அண்ணாமலை உறுதி இந்தியா
  • பாஜக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துரையாடிய நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • தினமலர் நிறுவனர் ராமசுப்பையர் நினைவு தினம்: நயினார் நாகேந்திரன் மரியாதை தமிழ்நாடு
  • பாஜக மாநில மையக்குழு கூட்டம் தமிழ்நாடு
  • பிரதமர் மோடியை சந்தித்தார் எலான் மஸ்க் உலகம்
  • இளைஞர்கள் யோகாவை வாழ்நாள் முழுவதும் ஒருதுணையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு
  • ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை:பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தலா ரூ.2 கோடி கடன்; பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme