Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • அமைச்சர் கமிஷன் காந்தி ஊழலுக்கு சப்பைக்கட்டு கட்டாமல் உடனடியாக பதவி விலக வேண்டும் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • திமுக ஆட்சியில் குற்றங்கள் தமிழ்நாடு
  • தினமலர் நிறுவனர் ராமசுப்பையர் நினைவு தினம்: நயினார் நாகேந்திரன் மரியாதை தமிழ்நாடு
  • தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி வெற்றி: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு தமிழ்நாடு
  • ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை:பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தலா ரூ.2 கோடி கடன்; பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு இந்தியா
  • தமிழகத்தில் ரூ.22,800 கோடி ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி ; மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமிழ்நாடு
  • நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழக விவசாயிகள் குழு இந்தியா
  • நடிகர் ராஜேஷ் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு

நெல்லையில் பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாபெரும் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு

Posted on August 22, 2025August 22, 2025 By வ.தங்கவேல் No Comments on நெல்லையில் பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாபெரும் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு

பாரதிய ஜனதா கட்சி சார்பில் 5 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பூத் பொறுப்பாளர்கள் மாநாடு இன்று (ஆகஸ்ட் 22) நெல்லையில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தில் மண்டலங்கள் தோறும் பூத் கமிட்டி மாநாடு நடத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல் மாநாடு நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தொடங்கியது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கேரள மாநிலம் கொச்சியில் இருந்து விமானத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை பாளையங்கோட்டைக்கு சென்றடைந்தார். அங்கு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

இதனைத்தொடர்ந்து மாநாடு நடைபெறும் திடலுக்கு வருகை புரிந்த அமித்ஷாவுக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

இந்த மாநாட்டில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: சண்டை என்று வரும்போது படைத்தளபதிகள் முன்னின்று சண்டை நடத்துவார்கள். பாஜகவின் பூத் தலைவர்கள் பூத் பொறுப்பாளர்கள் அந்த சண்டையின் முன்புறம் இருக்கும் தலைவர்கள். 2026 சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை ஏன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என சொல்வதில் முதல் பங்கு உங்களுக்கு உண்டு.

பிரதமர் மோடி 12 ஆண்டுகளாக தொடர்ச்சியாக உழைத்து வருகிறார். அடுத்த 8 மாதம் பிரதமர் மோடிக்காக, கட்சிக்காக உழைக்க வேண்டிய பொறுப்பு பூத் பொறுப்பாளர்களுக்கு உண்டு. திமுக ஆட்சியை அகற்றிவிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியை எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அமர வைக்க வேண்டிய பொறுப்பு தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு தொண்டருக்கும் உண்டு. அதனை வெற்றிகரமாக செய்து முடித்து காட்ட வேண்டும். 4 ஆண்டுகாலம் மிகக் கடுமையாக உழைத்துள்ளோம். திமுக ஆட்சி வந்த பிறகு பொதுமக்களுக்கு பாதுகாப்பு அரணாக பாஜக நின்றுள்ளது.

பாஜவின் நபர்கள் கைது செய்து சிறை சென்றுள்ளோம். மக்களுக்காக போராட்டம் நடத்தி உள்ளோம். 14 முதல் 30 நாள் சிறையில் இருந்துள்ளீர்கள். இந்த 8 மாத காலம் இந்த உழைப்புக்கு ஊதியமாக கடுமையாக உழைத்து தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியில் அமர வைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.

முதல்வர் ஸ்டாலினுக்கு எதை பார்த்தாலும் பயம். எதை பார்த்தாலும் பயந்து கொண்டு உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்த சட்டத்தை பார்த்து பயம். எதை பார்த்தாலும் பயந்து கொண்டு இருக்கும் முதல்வரை நிரந்தரமாக பயமில்லாமல் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு உள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதே இடத்தில் 2021 சட்டசபை தேர்தலின் போது எனக்காக பிரசாரம் செய்தார். அன்றைக்கு வெற்றி பெற்றோம். இன்று அவரின் கனவு எல்லாம். 5 ஆண்டுக்கு முன்பு பாஜகவுக்கு தொலைக்காட்சி வேண்டும் என்றோம். ஆனால், பூத் கமிட்டியை போய் பாருங்கள் என்றார். தமிழகத்தில் இன்னும் 7 இடங்களில் பூத் கமிட்டி நடக்க உள்ளது. அடுத்து கொங்கு மண்டலத்தில் நடைபெற உள்ளது.

அங்கு சிறப்பாக செய்வார்கள் என நம்புகிறேன். தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடக்கிறது. பாலியல் வன் கொடுமை நடக்கும் ஆட்சி. 10 வயது குழந்தை முதல் 70 வயது வரை வயதான பெண்கள் நடமாட முடியவில்லை. 2 நாட்களுக்கு முன்பு, கரூரில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற பெண் விஏஓவை அடித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

24 லாக்கப் மரணம் நடக்கிறது. ஆனால், முதல்வர் சாரி சொல்கிறார். கொலை செய்துவிட்டு சாரி சொல்கிறார். கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம். இது தான் திமுக ஆட்சியின் லட்சணம்.

திமுக ஆட்சி குடும்ப ஆட்சி. பாஜக ஆட்சி மக்களுக்கான ஆட்சி. அமித்ஷா ஆட்சி. மக்களிடம் போய் கேட்டுப்பாருங்கள். ஆனால் திராவிட மாடல் அரசு, திராவிட மாடல் அரசு என சொல்கிறார்கள். ஆனால் மக்கள் டிஸாஸ்டர் மாடல் ஆட்சி என சொல்கின்றனர். இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். இதற்காக உருவாக்கிய கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி. இதனை உருவாக்கியது அரசியல் சாணக்கியன் அமித்ஷா. நிச்சயம் வெற்றி பெறுவோம். சந்தர்ப்பம் இல்லை. இது சந்தர்ப்பவாத கூட்டணி என ஸ்டாலின் சொல்கிறார்.

1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைத்தீர்களே அது சந்தர்ப்பவாதம் இல்லையா. இன்று கவர்ச்சியுடன் கட்சி ஆரம்பித்துள்ளனர். 2026 ல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறக்கூடிய ஆட்சியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த போர் தர்மத்துக்கும் அதர்மத்துக்குமான போர். நீதிக்கும் அநீதிக்குமான போர். இந்த போரில் தர்மம் வெற்றி பெற வேண்டும். வென்றாக வேண்டும். பூத் கமிட்டி ஒவ்வொரு பொறுப்பாளரும் தொண்டரும் சபதம் ஏற்க வேண்டும். இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். இனிமேல் வரும் 8 மாதங்கள் தான் உங்களின் ஒவ்வொரு பொறுப்பும் நிச்சயம் உள்ளது. இந்த பொறுப்பை திறம்பட செய்ய வேண்டும்.

2021 ல் திமுக ஏராளமான வாக்குறுதி கொடுத்தது. அதனை திமுக நிறைவேற்றவில்லை. வாக்குறுதி எண்ணிக்கை அதிகரித்து கொண்டுள்ளது. சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி ஆக உள்ளார். ஆனால், தமிழுக்காக நாங்கள் தான் எல்லாம் செய்தோம் என ஸ்டாலின் கூறுகிறார்.

நீங்கள் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு. காஸ் மானியம், பெட்ரோல் கட்டணம், கல்விக்கட்டணம், தூய்மைப்பணியாளர்களை நிரந்தரமாக்குவோம். அரசு பணியிடங்களை நிரப்புவோம் என கொடுத்த வாக்குறுதி என்னாச்சு. சொத்துவரி என்னாச்சு. தமிழகத்தில் மின்கட்டனத்தை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது. முதல்வருக்கு வாக்குறுதி கொடுப்பது வழக்கம், தேர்தல் முடிந்து அதை மறப்பது அவரது பழக்கம். எத்தனை காலம் தான் தமிழகத்தை ஏமாற்ற முடியும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு Tags:#Annamalai, #Bjp, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் : ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
Next Post: பிஜியின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்கும்: பிரதமர் மோடி

Related Posts

  • தினமலர் நிறுவனர் ராமசுப்பையர் நினைவு தினம்: நயினார் நாகேந்திரன் மரியாதை தமிழ்நாடு
  • பாஜக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துரையாடிய நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் : தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு
  • ஸ்ரீ கந்தர் மலைக்காக சிறைச்சென்று ஜாமினில் வந்த பாஜக நிர்வாகிக்கு உற்சாக வரவேற்பு தமிழ்நாடு
  • வீடுகள் தோறும் தேசியக்கொடி; திருச்சியில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் தமிழ்நாடு
  • காசி தமிழ் சங்கமம் 3.0 அனுபவப் போட்டி: 46 பேருக்கு பரிசுகளை வழங்கினார் ஆளுநர் தமிழ்நாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ரூ.6 லட்சம் கோடி முதலீட்டை ஜப்பான் நாட்டில் ஈர்க்க இந்தியா இலக்கு: பிரதமர் மோடி
  • பிஜியின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்கும்: பிரதமர் மோடி
  • நெல்லையில் பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாபெரும் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
  • சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் : ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
  • இல.கணேசன் உடலுக்கு மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நேரில் அஞ்சலி

Recent Comments

No comments to show.

Archives

  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • வடலூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திமுக அரசுக்கு சம்மட்டி அடி: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்: தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா புகழாரம் இந்தியா
  • உள்துறை அமைச்சர் பற்றி அவதூறு பேச்சு: ராசா மீது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் புகார் தமிழ்நாடு
  • ஒரே நாடு, ஒரே தேர்தல் முக்கியத்துவம் பற்றி தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க உள்ளோம்: நயினார் நாகேந்திரன் அரசியல்
  • பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்: அதிபர் டிரம்ப் புகழாரம் இந்தியா
  • பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர் தான்: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • தினமலர் நிறுவனர் ராமசுப்பையர் நினைவு தினம்: நயினார் நாகேந்திரன் மரியாதை தமிழ்நாடு
  • ராஜராஜன், ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலைகள்: கங்கைகொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme