ஒரே நாடு, ஒரே தேர்தல் முக்கியத்துவம் பற்றி தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க உள்ளோம்: நயினார் நாகேந்திரன்
ஒரே நாடு, ஒரே தேர்தலின் தேவையை குறித்து நாங்கள் பயனுள்ள விவாதங்களை மேற்கொண்டோம். இதனுடைய முக்கியத்துவத்தை விளக்கி தமிழக மக்களுக்குத் தொடர்ச்சியாக எடுத்துரைக்கவுள்ளோம் என தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார். சென்னை, திருவான்மியூரில் இன்று பாஜக சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தலின் முக்கியத்துவத்தை விளக்கும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதுகுறித்து தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை நேரத்தையும் பணத்தையும் சேமித்து, தேர்தல் வழிமுறைகளில் ஒரு நிலைத்தன்மையை உறுதி செய்யும்…