அமெரிக்க வரிக்குறைப்புக்கு மேற்கொண்ட நடவடிக்கைக்காக டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எம்.பி.,க்கள் பாராட்டு தெரிவித்தனர்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் கடந்த 28ல் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. 2026 – 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பா.ஜ.க., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் பிப்ரவரியில் 1ஆம் தேதி தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடந்து வருகிறது.
இந்தநிலையில், (பிப்ரவரி 03) டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிக்குறைப்புக்கு முயற்சி மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எம்.பி.க்கள் பாராட்டு தெரிவித்தனர்.





