---Advertisement---

மக்கள் அனைவரும் யோகா செய்ய வேண்டும் : சர்வதேச யோகா தினத்தில் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

On: June 21, 2025 6:28 AM
Follow Us:
---Advertisement---

மக்கள் அனைவரும் யோகா பயிற்சியில் ஈடுபட்டு, நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுவதன் மூலம், வலிமையான பாரதத்தை கட்டமைக்கும் பெரும் பணியில் பங்கேற்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (ஜூன் 21) சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நெல்லையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் யோகா பயிற்சி செய்தார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியதாவது: சர்வதேச யோகா தினமான இன்று, திருநெல்வேலியில் யோகா பயிற்சி நிகழ்வில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் முத்து பலவேசம் அவர்களுடன் கலந்து கொண்டேன். இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மக்கள் அனைவரும் யோகா பயிற்சியில் ஈடுபட்டு, நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுவதன் மூலம், வலிமையான பாரதத்தை கட்டமைக்கும் பெரும் பணியில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

Leave a Comment