புகழ்பெற்ற தமிழ் அறிஞரும் இலக்கியவாதியுமான டி. ஞானசுந்தரத்தின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் அறிஞர் டி.ஞானசுந்தரம் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி (ஜனவரி 26) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்;
திரு டி. ஞானசுந்தரம் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ்க் கலாச்சாரத்திற்கும் இலக்கியத்திற்கும் அவரின் பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும். தனது எழுத்துக்கள் மூலம் வாழ்நாளை அர்ப்பணித்து சமூகத்தின் கலாச்சார உணர்வை அவர் வளப்படுத்தினார். அவரது படைப்புகள் வருங்காலத் தலைமுறை வாசகர்களுக்கும் அறிஞர்களுக்கும் தொடர்ந்து உத்வேகமளிக்கும்.
ஜனவரி 2024-ல் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலுக்குச் சென்றபோது அவருடன் உரையாடியதை நான் நினைத்துப்பார்க்கிறேன். கம்பராமாயணம் குறித்த அவரது புரிதல் மிகச் சிறப்பாக இருந்தது.
அவரது குடும்பத்தினருக்கும், அவர்மீது மதிப்பு வைத்திருப்போருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.






