---Advertisement---

குஜராத் சென்ற பிரதமர் மோடி மீது மலர் தூவிய கர்னல் சோபியா குரேஷி குடும்பத்தினர்

On: May 26, 2025 2:03 PM
Follow Us:
---Advertisement---

குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராணுவ கர்னல் அதிகாரியான சோபியா குரேஷியின் குடும்பத்தினர் பூக்கள் தூவி வரவேற்றது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 26) தனது சொந்த மாநிலமான குஜராத்தில் 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரமதர் மோடி குஜராத்தின் வதோதராவில் இன்று காரில் நின்றவாறு பேரணி சென்றார். அப்போது பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

இந்த சமயத்தில் ஆபரேஷன் சிந்தூரில் இடம்பெற்ற ராணுவ அதிகாரியான கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினர் திரண்டு வந்து பிரதமர் நரேந்திர மோடி மீது மலர்தூவி வரவேற்றனர். சோபியா குரேஷியின் தாய் ஹலிமா பிபி, தந்தை தாஜ் முகமது குரேஷி, சகோதரி சைனா சன்ரா,சகோதரர் சஞ்சய் குரேஷி உள்ளிட்டவர்கள் வந்து பிரதமர் மீது மலர்தூவி வரவேற்றனர்.

ஆபரேஷன் சிந்தூரில் முக்கிய பங்காற்றிய கர்னல் சோபியா குரேஷி ஆவார். பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் சேர்ந்து 2 பெண் அதிகாரிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து கள நிலவரம் பற்றி விளக்கம் அளித்தனர். அதில் ஒருவர் தான் ராணுவ கர்னல் சோபியா குரேஷி.

இதுபற்றி சோபியோ குரேஷியின் சகோதரி சைனா சன்ரா கூறுகையில், ‛‛பிரதமர் மோடியுடன் நல்ல சந்திப்பை நடத்தியதாக நாங்கள் நினைக்கிறோம். பெண்களுக்கு அதிகாரம் வழங்க பிரதமர் மோடி பணிகளை மேற்கொண்டு வருகிறார். சோபியா என்னுடைய இரட்டை சகோதரி. அவள் நாட்டுக்காக ஏதாவது செய்யும்போது அது அனைவருக்கும் உத்வேகம் தருகிறது. இனி சோபியா என் சகோதரி அல்ல. இந்த நாட்டுக்கான சகோதரி” என்று பெருமையாக கூறினார்.

சோபியா குரேஷியின் தாய் ஹலிமா பிபி கூறுகையில், ‛‛பிரதமர் மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சி. பெண்களான இந்த நாட்டின் சகோதரிகள் அனைவரும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் மக்கிழ்ச்சி அடைந்துள்ளனர்.’’ இதுபற்றி சோபியா குரேஷியின் தந்தை தாஜ் முகமது குரேஷி கூறுகையில், ‛‛பிரதமர் மோடி எங்களை அங்கீகாரம் செய்தார். அவர் எங்களை வாழ்த்தினார். நாங்களும் அவரை வாழ்த்தினோம்’’ என்றார்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

Leave a Comment