
சுமார் 900 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் மதுரை, பாலையூர் பஞ்சாயத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தினமும் பள்ளிக்கு செல்வதற்காக பேருந்திற்கு 3 கி.மீ. நடந்தே செல்லும் அவலநிலை உள்ளது. தங்களின் வசிப்பிடத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள பாலையூர் பிரிவிற்கு தான் பேருந்திற்கு செல்ல வேண்டும், பின் அங்கிருந்து சாப்டூரிலுள்ள மேல்நிலைப் பள்ளிக்கு சென்று, பிறகு மாலையில் பாலையூர் பிரிவிலிருந்து நடந்தே வீட்டிற்கு வருகின்றோம் என்று மாணவர்கள் கவலை.
அதுவும், தேர்வு நேரத்தில் மாணவர்களை இப்படி இன்னல்களுக்கு உள்ளாக்குவது, அவர்களுக்கு சோர்வு ஏற்படும் நிலைக்கு தான் வழிவகுக்கும் என பெற்றோர்கள் கவலை. அதுமட்டுமல்லாமல், பேருந்து சரியான நேரத்தில் வராமல் இருப்பதும், மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு உண்டாகின்றன என பலர் கருத்து, இதனால் அவர்கள் நேரத்திற்கு பள்ளி செல்லமுடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
பேருந்து போக்குவரத்தில் தமிழகம் தான் முதலிடம் என்று மார்தட்டிக்கொள்ளும் திமுக அரசு, பள்ளி செல்லும் மாணவர்களுக்கே முறையாக பேருந்து வசதி செய்து கொடுக்காமல் அவர்களை பல இன்னல்களுக்கு உள்ளாக்கி வருகிறது. சமீபத்தில் மாணவர்கள் திமுக அரசு பேருந்து சேவையை முறையாக வழங்கவேண்டும் என்று அரசு அலுவகங்களுக்கு சென்று முறையிட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. ஒருபக்கம் ஓட்டை உடைசலான பேருந்துகளை இயக்கியும், அதனால் பேருந்தில் பயணிக்கும் பலருக்கு காயம் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது, மறுபுறம் பேருந்து சேவையே இல்லாமல் இருக்கும் நிலை. சூழல் இப்படி மோசமாக இருக்க திமுக அரசின் முழு கவனமும் தினந்தோரும் விளம்பரம் தேடுவதே என்கின்றனர் பொதுமக்கள்.



