2026 தேர்தல் அப்டேட்: பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் இதோ!
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதியாக முடிவடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட 27 சட்டமன்ற தொகுதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தாமரை சின்னத்தில் தமாகா 5 தொகுதிகளிலும், தென்னிந்திய பார்வார்டு பிளாக் ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு தெளிவடைந்துள்ளது.
இந்த நிலையில், பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் பின்வருமாறு:
மைலாப்பூர், தரி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவிநாசி (தனி), திருப்பூர் (வடக்கு), கோயம்புத்தூர் வடக்கு, கந்தர்வகோட்டை (தனி), புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர் (தனி), ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அரந்தாங்கி, மானாமதுரை (தனி), ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம் மற்றும் ராசிபுரம் (தனி).
இந்த அறிவிப்பின் மூலம், என்.டி.ஏ கூட்டணியின் தேர்தல் பணிகள் மேலும் வேகமெடுக்கும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது






