மோடி ஐயா உங்களுடன் இருப்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளார் : மதுரை விவசாயிகள் மத்தியில் தலைவர் அண்ணாமலை பெருமிதம்
விவசாயிகளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி ஐயா எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டார் என (ஜனவரி 30) மதுரையில் விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் தலைவர் அண்ணாமலை கூறினார். டங்ஸ்டன் திட்டம் வராமல் தடுத்து நிறுத்தியதற்கான பாராட்டு விழாவில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து மதுரை வந்தடைந்த மத்திய கனிமவளத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி மற்றும் தலைவர் அண்ணாமலைக்கு வழிநெடுகிலும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியில் செயல்படுத்தப்படவிருந்த டங்ஸ்டன் கனிம சுரங்க…