---Advertisement---

ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை

On: June 26, 2025 12:05 PM
Follow Us:
---Advertisement---

சிலம்புச் செல்வம் ம.பொ.சியின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள ம.பொ.சி. அவர்களின் சிலைக்கு இன்று (ஜூன் 26) தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்தநிலையில், இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: ம.பொ.சி என்று அன்போடு அழைக்கப்படும், திரு. மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் ஐயா அவர்களின் 119வது பிறந்த நாளையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

நம்முடைய சென்னை மாநகரம் ஆந்திராவுடன் இணைக்கப்படுவதை தடுத்து தமிழ்நாட்டுடன் இணைவதற்கும், கன்னியாகுமரி, பாளையங்கோட்டை போன்ற பகுதிகள் கேரளாவுடன் இணையாமல் தடுக்கப்பட்டதற்கும்,  ‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சி அவர்களின் போராட்டம் முக்கிய காரணமாகும்.

இன்றைய நாளில், அவரது புகழை போற்றி வணங்குவோம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

Leave a Comment