
கடந்த நான்கரை ஆண்டுகளாக அளித்த வாக்குறுதியை துளியும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிய திமுக அரசு, இப்போது தூய்மை பணியாளர்களையும் அதேபோல் தான் நடத்துகிறது. இதனை எதிர்த்து திமுக கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்டின் தொழிளாலர்கள் சங்கம் நிர்வாகிகள், மற்றும் விசிக கட்சியினரே போர்க்கொடி தூக்கியுள்ளனர். மதுரை மாநகரில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், நேற்று மாநகராட்சி மண்டலம்-3 அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.
அவர்கள் முன்வைத்த கோரிக்கையானது, நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் ஒப்படைப்பு விடுப்புத் தொகை உள்ளிட்ட மற்ற தொகைகள், தினசரி குறைந்தபட்ச ஊதியத்தை ரூ. 761 ஆக உயர்த்த வேண்டும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மதுரை மாநகரில் பணிபுரியும் 389 தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும், பிற பிரிவில் பணியாற்றுகின்ற ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அரசாணை படி ஊதியம் வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.
ஒருபுறம் நாங்கள் தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்து வருகிறோம் என்று தம்பட்டம் அடித்து கொண்டிருக்கும் திமுக அரசு, உண்மையை மறைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கியது தான் மிச்சம். பெயரளவில் திட்டங்களை அறிவித்து அதை சீராக செயல்படுத்தாமல் கிடக்கிறது என்று தூய்மை பணியாளர்கள் பலர் குற்றச்சாட்டு. இதில் ஒன்று தான், தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம், தேர்தலை கருத்தில் கொண்டு தொடங்கிய இத்திட்டம் சில வாரங்களே ஆகும் நிலையில், திமுக அரசு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தரமற்ற உணவு வழங்கி வருகிறது என்பது அன்றாட நிகழ்வுகள் மூலம் வெட்டவெளிச்சமாக தெரிகிறது. இவை அனைத்தையும் மறைத்து திமுக நடத்தும் நாடகங்களுக்கு தூய்மை பணியாளர்கள் தக்க பாடம் புகட்டுக்குவார்கள் என்று பலர் கருத்து.




