
திருநெல்வேலி மாவட்டம், பழவூர் பஞ்சாயத்தில் விதிகளை மீறி மக்கள் வசிப்பிடத்திற்கு 100 மீட்டருக்குள் டாஸ்மாக் கடை திறக்க திமுக அரசு முடிவெடுத்துள்ளது.
இதனையறிந்த அப்பகுதி மக்கள், அரசு நிர்ணயித்த இடத்திலிருந்து மக்கள் வசிப்பிடம், பள்ளி, வழிபாட்டு தளங்கள் உள்ளன என்று, அரசின் இம்முடிவை எதிர்த்து, மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். பின்னர், அவர்கள் கையில் ஏந்திய பதாகைகளில் “தமிழக அரசே, படிப்பதற்கு நூலகங்கள் கேட்டால் குடிப்பதற்கு டாஸ்மாக் கா?” என்று வாசகத்துடன் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஏற்கனவே தமிழகத்தின் எத்திசையிலும் போதைப் பொருள் புழக்கத்தினால் பள்ளி மாணவர்களிலிருந்து போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, அதன் விளைவாக பல குற்றங்களில் ஈடுபட்டு, மாணவர்கள் பள்ளிப்படிப்பை கைவிடுவது தொடர்கதையாகி வருகிறது. மிக முக்கியமாக மத்திய அரசு வெளியிட்ட தகவலின் படி கடந்த 2021-22 ஆம் ஆண்டிலிருந்து, தற்போது மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், தொடக்கப் பள்ளி வகுப்புகளில் 0%-ல் இருந்து 2.7% ஆகவும், நடுநிலை வகுப்புகளில் 0%-ல் இருந்து 2.8% ஆகவும், உயர்நிலை வகுப்புகளில் 4.47%-ல் இருந்து 8.5% ஆகவும் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளில் , தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது, இச்சூழலில் திமுக அரசு நிர்வாகத்தின் இப்படியொரு முடிவிற்கு பின்விளைவு இன்னும் மோசமாகவே இருக்கும் என்று பலர் இவ்விவகாரத்தில் கருத்து.





