
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக விரிவுரையாளர்கள், திமுக அரசிடம் ஐந்து அம்ச கோரிக்கைகளான UGC வழிகாட்டுதல், ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும், வேலை பாதுகாப்பு, போன்றவற்றை முன்வைத்து கடந்த திங்கள் முதல் போராடி வருகின்றனர், இதனால் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, திருச்சி சுற்றியுள்ள கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள், மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு சென்று வருவதால், கல்லூரிகளில் தினசரி நடக்கும் வகுப்புகள் பாதிக்கப்படுவதாக மாணவர்கள் வேதனை.
தொடர்ந்து இதுபோல், கல்லூரிகளுக்கு போதுமான நிதியை ஒதுக்காமலும், அடிப்படை வசதிகளை செய்து கெடுக்காமலும் காலம் தாழ்த்தி வந்த திமுக அரசு, இப்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மனமில்லாமல் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றது என்று பலர் குற்றச்சாட்டு.
இரு தினங்களுக்கு முன்பு, தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அரசு பட்ஜெட்டில் செய்த ஏமாற்று வேலையை வெளிக்கொண்டு வந்தார். குறிப்பாக, கடந்த நிதிஆண்டை (2025-26) ஒப்பிடுகையில் வருகின்ற 2026-27 நிதியாண்டிற்கு உயர்கல்வித்துறைக்கு ஒதுக்கிய நிதி ரூ. 8,494 கோடியிலிருந்து ரூ. 11 கோடியை உயர்த்தி, ரூ. 8,505 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும், அண்ணா பல்கலைக்கழகத்தை புதுப்பிக்க ரூ. 1,380 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது, இப்படி வெறும் ரூ. 11 கோடியை உயர்த்திவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தை புதுப்பிக்க எப்படி நிதி வரும் என்பதை பற்றி அரசு குறிப்பிடவில்லை என்று அவர் குற்றச்சாட்டு. மேலும், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது உயர்கல்வியில் 49% ஆக இருந்த மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் (GER), தற்போது இந்த நிதிநிலை அறிக்கையில் 47% ஆக குறைந்துள்ளது என்ற உண்மையை சுட்டிக்காட்டி திமுக அரசின் கீழ் கல்வித்துறை எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை அம்பலப்படுத்தினார்.
கடந்த ஐந்தாண்டுகளாக, பல்வேறு விளம்பர திட்டத்திற்கு நிதி ஒதுக்கி அதற்கு முழு கவனம் செலுத்திவரும் திமுக அரசு, மாநிலத்தின் முக்கியப் பிரச்சினையான கல்வித்துறையில் நாள்தோறும் அரங்கேறும் அவலநிலைகளை மக்களிடமிருந்து மறைக்க தொடர்ந்து மடைமாற்றும் வேலைகளில் மட்டுமே ஈடுபடுகின்றது என்று பலர் குற்றச்சாட்டு.



