---Advertisement---

உணவு தரமில்லை, ஹோட்டல் உணவே மேல், இது தான் திராவிட மாடலா?

On: February 17, 2026 2:25 PM
Follow Us:
---Advertisement---

திமுக அரசு ஒருபக்கம் தூய்மைப்பணியாளர்களை போராட்டத்த்தில் தள்ளி அவர்களுக்கு பல இன்னல்களை கொடுத்து வந்தது, தற்போது பெயரளவிற்கு முழு உணவு வழங்கப்படும் என்று அறிவித்து சென்னையில் தூய்மைப்பணியாளர்களுக்கு தரமில்லா உணவு வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியார் செய்தி நிறுவனம் நடத்திய களஆய்வில், தமிழக அரசு ஒவ்வொரு தூய்மைப்பணியாளர்களுக்கு உணவிற்கு ரூ.57.75 செலவிடுகிறது. ஆனால், உணவின் தரம் என்பது அந்த மதிப்பிற்கும் குறைவாக அதாவது ரூ. 20-40 மதிப்பில் விற்கப்படும் உணவின் தரத்தைவிட மிகவும் குறைவு.

மேலும் அவர்கள் கூறியதாவது தினமும் அரசு வழங்கும் உணவு என்பது புளி சாதம், எலும்பிச்சை சாதம் போன்ற சத்தில்லா உணவுகளே, அதற்கு நாங்கள் உணவு சாப்பிடாமலே இருப்போம். அதுமட்டுமல்லாமல் அரசு இந்த உணவு வழங்கும் முன் நாங்கள் அருகிலுள்ள உணவகத்தில் வாங்கி சாப்பிடும் உணவுக்கு கூட்டு மற்றும் பொரியல் என அரசின் உணவு விலையிலே வழங்குவர். திமுக அரசு உணவிற்கு பதிலாக இந்த பணத்தை எங்களுக்கு கொடுத்தால் நாங்கள் அம்மா உணவகத்தில் நல்ல உணவு சாப்பிடுவோம் என்று தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல் அரசின் உத்தரவின்படி முதல் வேலைப்பணிக்கு காலை 6:00 மணிக்கு வரும் தூய்மைப்பணியாளர்களை காலை 5:30 மணிக்கே வரச்சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர் என்று பலர் புகார். அதோடு அவர்களை காலை உணவை தவிர்க்கவைத்து வேலைப்பணி முடியும் மதியம் 2 மணிக்கு மேல் தான் உணவையே வழங்குகின்றனர் என அவர்கள் வேதனை.

அத்துடன், குடிநீர் பிரச்சனை என்பது தலைவிரித்தாடுகிறது என்றும், சம்பாதிக்கும் பணத்தில் குறிப்பிட்ட தொகை இதற்காகவே செலவிடப்படுகிறது என்று அவர்கள் திமுக அரசிற்கு எதிராக புகார்களை அடுக்கினர்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment