இளைஞர்கள் யோகாவை வாழ்நாள் முழுவதும் ஒரு துணையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என சர்வதேச யோகா தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை (ஜூன் 21) வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடகப்பதிவில்; மதுரை வேலம்மாள் ஐபி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற 11வது #சர்வதேசயோகாதினம் கொண்டாட்டத்தில் ஆளுநர் ரவி அவர்கள் 10,000 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, முக்கிய யோகாசனங்களை செய்து, அவர்களுடன் ஆழமான நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழ்நாட்டின் புனித மண்ணில் பிறந்த பதஞ்சலி முனிவரால் குறியிடப்பட்ட, மனிதகுலத்திற்கு இந்தியாவின் ஆகச்சிறந்த பரிசான யோகா, பத்து ஆண்டுகளுக்கு முன்பு உலக அரங்கிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது முதல், இது ஒரு உலகளாவிய இயக்கமாக வளர்ந்து, முழுமையான நல்வாழ்வையும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உலகளாவிய விழிப்புணர்வையும் ஊக்குவித்து வருகிறது.
தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சிறப்பை நோக்கிய பயணத்தில், இளைஞர்கள் யோகாவை வாழ்நாள் முழுவதும் ஒரு துணையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.