திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று (ஜூலை 14) கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்தநிலையில், இதுகுறித்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா, நிகழ்வில் கலந்துகொண்டு ஸ்ரீ முருகப்பெருமானை தரிசித்தேன். நம் மக்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ அருள் புரிய வேண்டும் என்று மனமுருகி வேண்டினேன். பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அப்போது உடன், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்க பெருமாள், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.