அதிமுக ஆட்சியில் பிரிக்கப்பட்டதால் திருப்பத்தூர் மாவட்ட மக்களை திமுக புறக்கணிக்கிறது: மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
கடந்த அதிமுக ஆட்சியில் உருவான திருப்பத்தூர் மாவட்டம் என்பதால் திமுக அரசு கண்டுக்கொள்வதில்லை என மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ‘‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’’ நிகழ்ச்சி (நவம்பர் 10) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்…

