வட சென்னையில் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திரா அமைக்க வேண்டும் என்ற, தலைவர் அண்ணாமலை விடுத்த கோரிக்கையை, வெளியுறவு துறை அமைச்சகம் ஏற்றுள்ளது.
இது குறித்து தலைவர் அண்ணாமலைக்கு, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
உங்கள் கோரிக்கை அமைச்சகத்தால் முறையாக ஆராயப்பட்டது. பாஸ்போர்ட் சேவா கேந்திரா இல்லாததால், வடசென்னையில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்க்க, வட சென்னையில் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திரா அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. பெரியார் நகர் பகுதியில் உள்ள அஞ்சல் நிலையத்தில், தேவையான இடத்தை வழங்குவதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. அங்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கும். இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் வடசென்னை மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.