---Advertisement---

பிரதமர் மோடியை சந்தித்தார் எலான் மஸ்க்

On: February 14, 2025 7:08 PM
Follow Us:
---Advertisement---

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தன் மனைவி குழந்தைகளுடன் சந்தித்து பேசினார்.

பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக அதிபர் டிரம்ப்பின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர், அமெரிக்க உளவுத்துறைத் தலைவரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான துளசி கப்பார்டை சந்தித்து பேசினார். அப்போது பயங்கரவாதம், பாதுகாப்பு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்திய நேரப்படி 10: 15 மணியளவில் அதிபரின் விருந்தினர் மாளிகையில் தங்கி உள்ள பிரதமர் மோடியை, தொழில் அதிபர் எலான் மஸ்க் தன் மனைவி, குழந்தைகளுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடிக்கு எலான் மஸ்க் நினைவுபரிசு வழங்கினார். 

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

Leave a Comment