முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் மாதிரி அமைப்பு: மக்கள் தரிசனத்துக்கு இன்று முதல் அனுமதி

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு இன்று முதல் (ஜூன் 16) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22-ல் நடைபெறுகிறது. இதையாட்டி மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி அறுபடை வீடுகளை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று திறந்து வைத்தார். முருகனின் அறுபடை வீடுகளாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி,…