பயிற்சி முடித்த 478 ராணுவ அதிகாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சித் கல்லூரியில் நேற்று (ஏப்ரல் 10) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 478 அதிகாரிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பட்டங்கள் வழங்கினார். நீலகிரி மாவட்டம் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சித் கல்லூரியில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 45 வார பயிற்சியை நிறைவு செய்த 478 அதிகாரிகளுக்கு பட்டங்கள் வழங்கி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு இந்திய ராணுவம் சரியான நேரத்தில் நிவாரணம் வழங்கியது…