UPI-க்கு வரி என்பது தவறான தகவல்: சாதாரண மக்களுக்கு இலவசம் தொடர்கிறது
UPI பரிவர்த்தனைகளுக்கு வரி என்ற பரப்புரை உண்மையல்ல. சாதாரண மக்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் UPI முழுமையாக இலவசமாகத் தொடர்கிறது; வணிக வளாகங்கள், பெரிய சில்லறை நிறுவனங்கள், இ-காமர்ஸ் போன்ற பெரிய வணிகர்கள் மட்டுமே 0.4 சதவீதம் (அதிகபட்சம் ₹300) கட்டணத்தை வங்கிகளுக்குச் செலுத்துவர். அது வாடிக்கையாளர் மீது சுமத்தப்படாது. UPI என்ற தேசிய சொத்தை நிலையாக வைத்திருக்கும் நடவடிக்கை இது.
நாராயணன் திருப்பதி
16 செப்டம்பர் 2026

