தமிழ்நாட்டின் "எப்ஸ்டீன்" ஜெம் கிரானைட் வீரமணி
எழுதியவர்

கார்வேந்தன்
4 அக்டோபர் 2026
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், பாஜக தேசியக் பொதுக்குழு உறுப்பினர்
ஜெம் கிரானைட் வீரமணி — கோப்புப் படம்ஜெம் கிரானைட் வீரமணி அடிப்படையில் ஒரு சட்டம் பயின்ற வழக்கறிஞர். முதன் முதலில் 1970 ஆம் ஆண்டு "கிரானைட்" தொழில் துவங்கி 1972 ஆம் ஆண்டு "ஜெம் கிரானைட்ஸ்" என்ற நிறுவனத்தை உருவாக்கினார். கிரானைட்ஸ் துறையில் மிகப்பிரபலமாக வளர்ந்து வந்தார். இன்று அதன் கிளைகள் உலகம் முழுவதும் பல நாடுகளில் இயங்கி வருகிறது.
திருச்செங்கோடு செ.கந்தப்பன் ஆரம்ப கால திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர். அவர் 1971 ஆம் ஆண்டு திருச்செங்கோடு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் வீரமணியின் மூத்த சகோதரி சாந்தாமணியை மணந்தார். வீரமணியின் தந்தை ரங்கசாமிக்கவுண்டர் 1957ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆதரவில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டவர். மேலும் வீரமணி ஆரம்ப காலம் முதல் தி.மு.க. வின் தீவிர ஆதரவாளர், தி.மு.கவின் நிரந்தர நன்கொடையாளர்.
சென்னையில் அண்ணா பல்கலைக் கழகத்தோடு சேர்ந்து 'Anna Gem Science Park School' என்ற பள்ளி ஒன்றை சென்னையில் துவக்கி நடத்தி வந்தார். கர்நாடகா, ஆந்திராவில் சிவப்புக்கிரானைட் பாக்டரிகள் சுமார் 1000 ஏக்கர் நிலத்தில் நடத்தி வருகிறார். முதன் முதலில் 06.10.2025 அன்று சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஒரு என்.ஜி.ஓ. நிறுவனம் சென்னை மாநகர காவல்துறையின் 'Immoral Trafficking Prevention Unit' ஆய்வாளரிடம் ஜெம் கிரானைட் வீரமணி மைனர் குழந்தையொன்றை உதவியாளர் சாந்தியின் வீட்டில் வைத்து தன் காம இச்சைக்கு சிதைத்தது குறித்து புகார் ஒன்றை கொடுத்தார். அதற்கு ஆதாரமாக ஒரு "பென் டிரைவ்" ஒன்றையும் கொடுத்தார்.
அந்தப் புகாரின் பேரில் போலீசார் 07.10.2025 அன்று போக்சோ சட்டத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் சென்னை மாநகர காவல்துறை ஜெம் கிரானைட் வீரமணியை கைது செய்யவோ விசாரிக்கவோ இல்லை. காரணம் அப்போதைய ஆளும் கட்சியான தி.மு.க.வின் ஒரு முக்கிய புள்ளியாகத் திகழ்ந்தார் என்பதால், மேலும் தி.மு.க. வழக்கறிஞர் அணியிலும் அங்கம் வகித்தார்.
சென்னை மாநகர காவல்துறை விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டதாகவும், எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லையென வழக்கை முடிக்க 20.02.2026 அன்று போக்சோ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அந்த அறிக்கையை நிராகரித்து மறுவிசாரணைக்கு உத்தரவிட்டார்.
தற்போதைய தமிழக அரசின் நடவடிக்கையின் மூலம் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் எடுத்த நடவடிக்கையால் வீரமணியால் 13 முதல் 18 வயதுடைய பல பெண் குழந்தைகள் அதுவும் பெரும்பாலும் பட்டியலினத்தை சார்ந்தவர்களை சூறையாடப்பட்டது வெளியில் வந்துள்ளது.
ஜெம் கிரானைட் வீரமணி, அவரின் காம இச்சை செயல்களுக்கு உடந்தையாக இருந்த சாந்தி அவர் கணவர் மகேந்திர சிம்மன், உதவியாளர் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
எனக்குள்ளே சந்தேகமே,
தமிழ்நாடு தொலைக்காட்சிகள், சமூக நீதி போராளிகள் ஏன் இந்த சம்பவத்தை கண்டுகொள்ளவில்லை ?
மணிப்பூருக்கு மெழுகுவர்த்தி ஏந்திய அக்கா கனிமொழி ஏன் வாய்திறக்கவில்லை ? ஏன் சமூக நீதி காவலர்கள் அமைதி காக்கின்றனர்?
போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்டவரின் போட்டோ மற்றும் விபரங்கள் வெளியிடக் கூடாதென்பது அடிப்படைவிதி, ஆனால் முன்னாள் தி.மு.க. சட்ட அமைச்சர் வீடியோ தெளிவாக இல்லை என்கிறார். ஆகவே தி.மு.க. அரசு வழக்கை திட்டமிட்டு முடிக்க முயன்றதா? நான்கு மாதங்கள் கிடப்பில் போட்டது ஏன்?
இந்த வழக்கை முடிக்க முயன்ற அத்தனை காவல்துறையினர் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.