தமிழ்நாட்டிற்கு மோடி அரசு செய்தவை என்னென்ன?
மத்திய அரசின் தமிழ்நாடு சார்ந்த அறிவிப்புகளும் நிதி ஒதுக்கீடுகளும் — தேதிவாரியான பதிவுகள்.

சமீபத்திய பதிவுகள்
- 19 ஆகஸ்ட்
கும்மிடிப்பூண்டி–கூடூர் ரயில் பாதை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் — தமிழ்நாடு–ஆந்திராவை இணைக்கும் 90 கி.மீ. கும்மிடிப்பூண்டி–கூடூர் வழித்தடத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் பாதைகளை அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.
Akashvani - 17 ஆகஸ்ட்
தமிழ்நாட்டுக்கு 7 புதிய மின்னணுக் கூறுகள் உற்பத்தித் திட்டங்கள் — மத்திய அரசின் ECMS திட்டத்தின் கீழ் ஒப்புதல் பெற்ற 31 புதிய விண்ணப்பங்களில், அதிகபட்சமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
- 15 ஆகஸ்ட்
சென்னை MEPZ உள்கட்டமைப்பு முழுமையாக மறுசீரமைப்பு — சென்னை MEPZ சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் மின்சாரம், நீர்வழங்கல், போக்குவரத்து, வடிகால், கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்ட அமைப்புகளை மேம்படுத்தும் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மறுசீரமைப்புத் திட்டம் தொடங்கப்பட்டது.
PIB - 13 ஆகஸ்ட்
மனித–யானை மோதலைக் குறைக்க ₹500 கோடி செயல் திட்டம் — தமிழ்நாடு உட்பட நான்கு தென் மாநிலங்களுக்கு ₹500 கோடி மத்திய ஆதரவுடன் மனித–யானை மோதல் மேலாண்மை செயல் திட்டமும், நீலகிரி யானைகள் காப்பகத்திற்கான மாதிரி பாதுகாப்புத் திட்டமும் வெளியிடப்பட்டன.
DD News - 13 ஆகஸ்ட்
தமிழ்நாட்டில் டீப்-டெக் தொழில்களுக்கு ஊக்கம் — கல்பாக்கம் IGCAR தொழில்நுட்பங்களைத் தமிழ்நாட்டில் வணிகமயமாக்க AIC FAST மற்றும் Guidance Tamil Nadu இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- 11 ஆகஸ்ட்
சென்னை துறைமுகத்துக்குச் சரக்கு ரயில் இணைப்பு — ஹைதராபாத் சனத்நகர் சரக்குப் பெட்டக முனையம்–சென்னை துறைமுகம் இடையிலான கன்டெய்னர் சரக்கு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
- 10 ஆகஸ்ட்
கோவைக்கு புதிய அம்ரித் பாரத் ரயில் — தன்பாத்–கோயம்புத்தூர் இடையே புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகப்படுத்த ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
- 10 ஆகஸ்ட்
₹420.16 கோடி முதலீடு; 1,894 வேலைவாய்ப்புகள் — கோயம்புத்தூர் மற்றும் ஒரகடம்–ஸ்ரீபெரும்புதூரில் மூன்று தொழில் திட்டங்களுக்கான ₹420.16 கோடி தனியார் முதலீட்டு முன்மொழிவுகளுக்கு MEPZ ஒப்புதல் அளித்தது.
- 6 ஆகஸ்ட்
குடிநீர் கட்டமைப்புக்காக ₹96.52 கோடி — 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ், வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணிகளுக்காக தமிழ்நாடு அரசு செய்த செலவை மத்திய அரசு திருப்பி வழங்கியுள்ளது.
- 6 ஆகஸ்ட்
பழங்குடியின மக்களின் தொழில்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வழிகாட்டி, நிதி உதவி வழங்கி ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டத்தில் 'ஸ்டார்ட்அப் தமிழ்நாடு' (Startup TN) இணைக்கப்பட்டுள்ளது.
- 1 ஆகஸ்ட்
முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட ₹4,466 கோடி நிதி — தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலத்திட்டங்களை செம்மையாகச் செயல்படுத்தும் வகையில், மத்திய அரசின் வரி பகிர்வில் இருந்து கூடுதல் முன்பணத் தவணையாக இந்தத் தொகையை மோடி அரசு முன்கூட்டியே வழங்கியுள்ளது.
- 22 ஜூலை
பொதுமக்களுக்கு அடையாள அட்டை தொடர்பான சேவைகள் எளிதில் கிடைக்க, சேலம், காஞ்சிபுரம் மற்றும் தஞ்சாவூரில் புதிய பிரத்யேக ஆதார் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன (14–22 ஜூலை).
- 18 ஜூலை
விருதுநகர் — சம்பா மிளகாய் உற்பத்தி செய்யும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு, மிளகாய் சார்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசு ஆதரவு அளித்துள்ளது.
- 17 ஜூலை
சென்னை பூங்கா (Park), சின்ன சேலம் மற்றும் குன்னூர் ரயில் நிலையங்கள், பயணிகளுக்கான மேம்பட்ட வசதிகள் மற்றும் உள்ளூர் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கட்டமைப்புடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
- 16 ஜூலை
தமிழ்நாட்டின் கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களுக்காக ₹7,585.49 கோடி இடைக்கால ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முதல் தவணைக்கான ₹2,176.84 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
- 16 ஜூலை
கொளத்தூரில் புதிய அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் வடசென்னைவாசிகளின் வசதிக்காக பிரத்யேகமாக திறக்கப்பட்டுள்ளது.
- 8 ஜூலை
சந்தையில் விலை வீழ்ச்சியடைவதைத் தடுக்கும் வகையில், தமிழ்நாட்டு விவசாயிகளிடம் இருந்து 87,226 மெட்ரிக் டன் கொப்பரைத்தேங்காய் மற்றும் 96,879 மெட்ரிக் டன் தோத்தாபுரி மாம்பழங்களையும் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.