ஒரே நாடு
← கட்டுரைகள்

SIR திருத்தம் ஏன் மிகவும் அவசியம்?

எழுதியவர்

Oreynaadu Desk

6 அக்டோபர் 2026

சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் (SIR) வாக்காளர் பட்டியல் பக்கங்கள் — கோப்புப் படம்சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் (SIR) வாக்காளர் பட்டியல் பக்கங்கள் — கோப்புப் படம்

தேர்தல் நாளன்று காலையிலேயே எழுந்து, வரிசையில் நின்று வாக்களிக்கும் ஒரு முதியவரை நினைத்துப் பாருங்கள். முதல் முறையாக வாக்களிக்கப் போகும் ஒரு இளைஞரின் மகிழ்ச்சியை நினைத்துப் பாருங்கள். அவர்களிடம் இருப்பது ஓர் அடையாள அட்டை மட்டுமல்ல; நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை. அந்த உரிமையின் மதிப்பைக் காப்பாற்ற வேண்டுமென்றால், வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் SIR எனும் வாக்காளர் பட்டியல் திருத்தம் அவசியம்.

ஒரு குடும்பத்தில் அன்புக்குரியவர் மறைந்துவிட்டால், அவரது நினைவுகளைப் பாதுகாப்போம். ஆனால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இருக்க வேண்டுமா? இறப்பை உறுதிப்படுத்தி அந்தப் பதிவை நீக்குவது இயல்பான நிர்வாகப் பணிதானே?! அதை வாக்குரிமைப் பறிப்பு என்று காங்கிரஸ் சித்தரிப்பது என்ன நியாயம்?

வேலைக்காகவும் குடும்பத்திற்காகவும் மக்கள் ஊர் மாறுகிறார்கள். அங்கு வாக்காளராகப் பதிவு செய்யும்போது பழைய பதிவும் முறையாக மாற்றப்பட வேண்டும். ஒரே நபருக்கு இரண்டு இடங்களில் வாக்குரிமை இருக்கக்கூடாது.

நம்மை ஆளும் அரசைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, தகுதியுள்ள இந்தியக் குடிமக்களுக்கே உரியது. வங்கதேசம் உள்ளிட்ட பிற நாடுகளின் குடிமக்களுக்கு, இந்தியக் குடியுரிமை இல்லாமல் இங்கு வாக்குரிமை மட்டும் எப்படி இருக்கலாம்?! இந்த அடிப்படையை உறுதிப்படுத்துவதில் என்ன தவறு?

SIR நடவடிக்கையின் சட்டப்பூர்வத்தன்மையை உச்சநீதிமன்றமும் பரிசீலித்துள்ளது. 2026 மே 27 தீர்ப்பில், இந்தப் பணி தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வ அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதையே உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, சரிபார்ப்பு நடத்துவதே சட்டவிரோதம் அல்லது சதித்திட்டம் என்ற தோற்றத்தை உருவாக்குவது மக்களுக்கு உண்மையைச் சொல்வதாகாது. நன்மையைச் செய்வதும் ஆகாது.

ஒரு வேளை SIR பட்டியலில் பெயர் நீக்கப்பட்டது என்றாலும், தகுதியான ஒருவரின் வாக்குரிமை அடியோடு பறிக்கப்பட்டுவிட்டது என்பதாகாதே! வரைவுப் பட்டியலைப் பார்ப்பதற்கும், பெயரைச் சேர்க்கக் கோருவதற்கும், ஆட்சேபனை தெரிவிப்பதற்கும், மேல்முறையீடு செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, நீக்கப்பட்ட பதிவுகளின் எண்ணிக்கையை மட்டும் காட்டி மக்களை அச்சுறுத்தும் காங்கிரஸின் பிரசாரம் நேர்மையானதல்ல. மக்களின் வாக்குக்கு மதிப்பளிக்கும் இந்தச் சரிபார்ப்பை ஏன் எதிர்க்கிறீர்கள்?

வாக்காளர் பட்டியலில் தகுதியானவரின் பெயர் விடுபடுவதையும் ஏற்க முடியாது; தவறான பதிவு தொடர்வதையும் ஏற்க முடியாது. இந்த இரண்டையும் உறுதிப்படுத்துவதே பாஜகவின் நிலைப்பாடு.