பாலியல் போதை குற்றங்களை முதலமைச்சர் தடுப்பாரா?
எழுதியவர்
குமரிகிருஷ்ணன்
12 நவம்பர் 2026
பாரதிய ஜனதா கட்சி, பிரச்சாரப் பிரிவு, முன்னாள் மாநிலத் தலைவர்
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்துவக்க காலத்தில் சினிமா என்பது மனித ஒழுக்கத்தை போதிப்பதாக இருந்தது! இப்போதெல்லாம் சினிமா என்பது மனித அநாகரிகத்தை வலியுறுத்துவதாக இருக்கிறது!
கதாநாயகனாக சினிமாவில் வரும் இளைஞன் பெரும்பாலான சினிமாக்களில் பொறுக்கியாக இருக்கிறான்! மது அருந்துகிறான்!
கதாநாயகன் மது அருந்தாத சினிமா தமிழகத்தில் இப்போதெல்லாம் வருவதே இல்லை!
மது விநியோகத்தை மட்டும்தான் தமிழக அரசாங்கமே நேரடியாக செய்துவருகிறது! அந்த அளவுக்கு மதுவின் முக்கியத்துவத்தை தமிழக அரசு இளைஞர்களுக்கு உணர்த்துகிறது!
மது அருந்தி தெருவில் ஆடுகிற ஒருவன்தான் இன்றைய தமிழ் சமூகம் அங்கீகரிக்கும் “முன்மாதிரி இளைஞன்”!
என நாம் முடிவு செய்துகொள்ளும் அளவுக்கு தமிழகத்தில் சினிமாவுக்கு அங்கீகாரம் இருக்கிறது!
தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சினிமா கதாநாயகன்தான் இப்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் இருக்கிறார்!
1967 முதல் மெல்ல மெல்ல சினிமாவில் கால்வைத்த தமிழக அரசியல், இப்போது முழுமையாக “சினிமா சாக்கடையாக” மாறிவிட்டது என சொல்லலாம்!
சரி, இன்றைய சினிமா போதிக்கும் முதல் விசயம் மது! இரண்டாவது விசயம் என்ன? இரண்டாவது விசயம் கண்ணில் கண்ட பெண் யாராக இருந்தாலும் அவளை அடைந்துவிடுவான் கதாநாயகன்! அவளை இழுத்துவருவான்! அல்லது அவள் அவனோடு ஓடிப்போவாள்! அவளின் பெற்றோர்கள் சாக்கடையில் நெளியும் புழுவைப்போல விமர்சிக்கப்படுவார்கள்! இதுதான் தமிழ் சினிமா சொல்லும் பாடம்!
அம்மா அப்பா பெண்பார்த்து ஜாதகம் பார்த்து திருமணம் செய்துவைப்பது தமிழ் சமுதாய பழக்கமாக இருந்தாலும் சினிமாவில் அது இல்லை!
தற்கால சினிமாவைப்போலத்தான் மாவட்ட ஆட்சித்தலைவரான மத்திய அரசு அதிகாரிக்கு, இன்னொரு மாவட்ட ஆட்சித்தலைவரின் மனைவிக்கு, காமதூது விட்டுள்ளார் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்!
முதலமைச்சர் ஜோசப் நடித்த தற்கால தமிழ் சினிமாக்களின் முதல் காட்சியை முதல் வரிசையில் அமர்ந்து பார்த்ததால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்று எம்.எல்.ஏ ஆனவர்தான் இந்த அருள் விக்னேஷ்!
குறுந்தகவல் என்னும் வாட்சப் மெசேஜ் மூலமாக தனது மனைவியை ஆபாசமாக அணுகிய அந்த எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுங்கள் என்று, விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர், மாநில தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்!
தலைமை செயலாளர் முதலமைச்சரிடம் “என்ன செய்யலாம்?” என கேட்டிருக்கலாம்!
நடந்த இந்த சம்பவத்தை முதலமைச்சர் எப்படி பார்க்கிறார்? அவர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? என்பதுதான் இப்போது முக்கியமான மக்கள் விவாதமாக உள்ளது!
ஏனென்றால் தமிழ் சினிமாவின் தற்கால கலாச்சாரப்படி பார்த்தால், ஒரு ஹீரோ யாரை வேண்டுமானாலும் கையைப்பிடித்து இழுக்கலாம்! இவர் மெசேஜ்தானே அனுப்பியுள்ளார்! அது குற்றமே இல்லையே! என்று முதலமைச்சரான சினிமா ஹீரோ நினைக்கிறாரா?
அல்லது உண்மையான நமது ஹிந்து கலாச்சாரப்படி நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பார்க்கவேண்டும்!
நாகப்பட்டினத்தில் பூபாலன், நீலகிரியில் முகமது நசீப் இவர்கள் இருவருமே தவெகவின் அதிகாரம் மிக்க மாவட்ட செயலாளர்கள்! போதைபொருள் வியாபாரம் செய்ததாக மத்திய அரசின் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்!
மேலும் சில தவெகவினர் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்!
சோதனை செய்தால் அனைத்து தவெக நிர்வாகிகளும் கைது செய்யப்படுவார்களோ? என்னும் அச்சம் உள்ளது!
சென்ற ஆட்சியில் திமுகவும் இதைத்தான் செய்துவந்தது!
தற்கால தமிழ் சினிமா கலாச்சாரப்படி கதாநாயகன் கூடவே சுற்றித்திரியும் அவனது நண்பர்கள் எதை செய்தாலும் அது குற்றமல்ல! கதாநாயகன் அவர்களை காப்பாற்றுவான்!
போதை வழக்குகளிலும் சிறுமியரை சீரழிக்கும் போக்சோ வழக்குகளிலும் கொலை வழக்குகளிலும் தவெகவினர் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள்!
இந்த குற்றவாளிகள் அனைவருமே ஜோசப் ரசிகர்கள்! ஜோசப் எப்படி முடிவெடுப்பார்?
முதலமைச்சரை பொறுத்தமட்டில் இன்னும் அவர் சினிமா நடிகனாக நடந்துகொள்ளுவதாகவே தோன்றுகிறது!
காரணம் அவர் சட்டசபையில் அமரும்போது ஒரு சினிமா நடிகன் ஓய்வு நேரத்தில் சூட்டிங்கில் ஓரமாக உட்கார்ந்திருப்பதைப்போல மவுனமாக உட்கார்ந்திருக்கிறார்!
எதையுமே பேசுவதில்லை! இவரின் முறை வரும்போது எழுந்து நின்று சில டயலாக்குகளை பஞ்சிங் டயலாக்குகளாக பேசுகிறார்!
உடனே அவரது ரசிகர்களாக அங்கிருக்கும் எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் மேஜையை தட்டி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்!
முதலமைச்சராக அவர் எதையுமே பேசியதாக தெரியவில்லை! மேடைகளிலும்கூட அவர் டயலாக்தான் பேசுகிறார்! எங்கேயும் முதலமைச்சராக மனம் திறந்து பேசவில்லை!
தவெகவினர் செய்யும் பாலியல் குற்றங்களையும் போதைப்பொருள் குற்றங்களையும் சினிமா முதலமைச்சரால் தடுக்க முடியுமா? இவையெல்லாம் குற்றங்கள்தான் என்னும் முடிவுக்கு முதலமைச்சர் வந்துவிட்டாரா? என்னும் கேள்விகளுக்கான பதில்களை முதலமைச்சரின் உடனடியான நடவடிக்கைகளில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்!