அமெரிக்காவின் டொனார்டு டிரம் தோல்விக்கு, அவரின் இந்திய எதிர்ப்பும் ஒரு காரணம்!
எழுதியவர்
குமரிகிருஷ்ணன்
11 நவம்பர் 2026
பாரதிய ஜனதா கட்சி, பிரச்சாரப் பிரிவு, முன்னாள் மாநிலத் தலைவர்
வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்புசமீபத்தில் அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தலில் ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சி எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியிடம் தோல்வியுற்றது!
செனட் சபை, பிரதிநிதிகள் சபை என இரு சபைகளிலும் ஆளுங்கட்சியான டொனார்டு டிரம் தலைமையிலான குடியரசுக் கட்சி தோல்வியைத் தழுவியது!
இந்திய அரசியல் பார்வையாளர்கள் பலரும் இந்தத் தேர்தல் முடிவை “இந்திய அரசிடம் அமெரிக்க அரசு தோல்வியுற்றதாகக் கருதுகிறார்கள்!”
அது எப்படி அமெரிக்கத் தேர்தலில் இந்திய அரசு வெற்றி பெறும்? அப்படியென்றால், “ரசிய தேர்தலில் அமெரிக்கா தலையிட்டது”, “இந்திய அரசியலில் அமெரிக்காவின் ஜார்ஜ் சோரஸ் போன்றவர்கள் தலையிடுகிறார்கள்!” என்பது போன்ற தலையீடா? என நீங்கள் கேட்கலாம்!
இது அம்மாதிரியான தலையீடு இல்லை! இந்தியாவில் பாஜக ஆட்சியை, பிரதமர் நரேந்திரமோடியின் நிர்வாகத் திறமையை உலகமே கவனித்து வருகிறது! அமெரிக்க மக்களும் கவனிக்கிறார்கள்!
திடீர் அறிவிப்பாக அமெரிக்க அதிபர் டொனார்டு டிரம் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவிகித வரி விதிப்பது! தொடர்ந்து திடீரென 100 சதவிகிதம் கூடுதல் வரியினை விதிப்பது! போன்ற செயல்களை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை!
அமெரிக்க மக்களின் எதிர்ப்பை உணர்ந்து கொண்டதால்தான் 100 சதவிகித வரி விதிப்பை திரும்பப் பெற்றார் டொனார்டு டிரம்!
இந்தியா மீதான அமெரிக்காவின் செயல்பாடுகளை அமெரிக்க மக்கள் அதிகம் கவனித்துச் செயல்படுவதற்கு பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் ஜனநாயக ஆளுமையே காரணம்!
பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாகவே உலகின் “நம்பர் ஒன்” தலைவராக, சொந்த நாட்டு மக்களால் அதிகம் விரும்பப்படும் தலைவராக விளங்குகிறார் என்பது “மாணிங் கன்சன்” என்னும் நிறுவனம் மக்கள் மத்தியில் வாக்கெடுத்து அறிவித்து வரும் அறிவிப்பாகும்!
மாணிங் கன்சன் நிறுவனம் அந்தந்தத் தலைவர்களுக்கான நற்சான்று மதிப்பெண்களை அந்தந்த நாட்டு மக்களிடம்தான் வாக்கெடுப்பு நடத்திக் கண்டறிகிறது!
ஆனால், பிரதமர் நரேந்திரமோடியைப் பொறுத்தமட்டில் உலகம் முழுமையும் வாக்கெடுப்பு நடத்தினாலும் உலகம் தழுவிய நிலையில் “நம்பர் ஒன்” தலைவராக விளங்குவார்!
இந்தியாவில் நற்சான்று வாக்குகள் 70 சதவிகிதம் பெற்ற பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் அமெரிக்காவிலும் 70 சதவிகிதம் வாக்குகளைப் பெறுவார்! அந்த அளவுக்கு அவர் அமெரிக்காவிலும் செல்வாக்குடன் விளங்குகிறார்!
எனவேதான் அமெரிக்க அரசு இந்தியாவுக்கு அவமரியாதை செய்வதுபோல் வரிவிதிப்பு நிகழ்வுகளில் நடந்து கொண்டதை விரும்பாத அமெரிக்க வாக்காளர்கள் ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்பதும் ஒரு காரணமாகும்!
1947, 1965, 1971 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுத்த சூழல்களில் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே இருந்தது!
அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளின் ஆதரவை மனதில் வைத்துக் கொண்டுதான் பாகிஸ்தான் நம்மீது படை தொடுத்தது!
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பெகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 2025 மே 7 ம் தேதி முதல் 11 தேதி வரை நடந்த சிந்தூர் தாக்குதலை “நான் சொல்லித்தான்” இந்தியா நிறுத்தியது! என்று டொனார்டு டிரம் பிதற்றினார்!
இந்திய அரசாங்கம் டிரம்பின் பிதற்றலை மறுத்தது! 9 பயங்கரவாதிகளின் பயிற்சி மையங்களை பாகிஸ்தானில் மண்ணோடு மண்ணாக்கி எதிர்த் தாக்குதல் செய்கிறார்களா என 4 நாள் கவனித்து, அவர்கள் வைத்திருந்த அணுகுண்டு கிடங்கையும் தாக்கி அதை பயன்படுத்த முடியாமல் செய்து, பின்னர்தான், பாகிஸ்தான் மன்னிப்பு கோரிய நிலையில் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது இந்தியா!
இத்தனை வீரமிக்க செயலில் ஈடுபட்டு உலகப் புகழ் பெற்றுவரும் இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும் இந்திய அரசுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் டிரம்ப் அவர்கள் “நான் சொல்லித்தான் போரை இந்தியா நிறுத்தியது!” என்று சொன்னதை அமெரிக்காவில் வாழும் இந்திய அபிமானிகள் விரும்பவில்லை! இதன் காரணமாகவும் குடியரசுக் கட்சிக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு வலுப்பெற்றது!
அமெரிக்க தேர்தல் முடிவுகளுக்கு பல காரணங்கள் இருந்தபோது அமெரிக்க இந்திய நலன் விரும்பிகளின் வாக்கும் முக்கிய காரணமாக அமைந்தது என்பதுதான் உண்மை!
அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் தற்போது நடந்து முடிந்த தேர்தல் அமெரிக்க ஆளும்தரப்பை மாற்றி அமைக்கும் தேர்தல் அல்ல! அதிபர் மாறமாட்டார்! அத்தகைய அதிபருக்கான தேர்தல் அமெரிக்காவில் வர இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றன!
இந்தத் தேர்தல் முடிவுகள் கொண்டு வந்துள்ள மாற்றம் என்னவென்றால், “அமெரிக்க அதிபரின் அறிவிப்புகள் சட்டமாக வேண்டும் என்றால் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் ஆதரவு வேண்டும்! எதிர்க்கட்சி விரும்பும் திட்டத்தைத்தான் ஆளுங்கட்சியான டிரம்ப் கட்சி நிறைவேற்ற முடியும்!” நடந்து முடிந்தது இடைக்காலத் தேர்தல்!
இனி “இந்திய பொருட்கள் மீது 50 சதவிகிதம்”, “100 சதவிகிதம்” என்றெல்லாம் சொல்ல முடியாது! வரியைக் கட்டுவது அமெரிக்க நுகர்வோர்கள்தான் என்றபோதும் அது இந்திய ஏற்றுமதியை ஓரளவுக்கு பாதிக்கும் செயலாகும்!
“நண்பேண்டா” எனச் சொல்லி மோடியின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு இந்தியத் துரோகம் செய்தார் டிரம்ப்!
இந்தியத் தரப்பில் எவ்வித முயற்சியும் செய்யப்படாமல் “இந்திய நலன்” என்னும் கருத்து அமெரிக்கத் தேர்தலிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் உண்மை!