SIR விவகாரத்தில் காங்கிரஸின் இரட்டை முகம்!!
எழுதியவர்
Oreynaadu Desk
10 அக்டோபர் 2026
வாக்காளர் பட்டியல் நகலுடன் ராகுல் காந்தி — கோப்புப் படம்கேரளாவில் SIR வாக்குத் திருத்த நடவடிக்கை காங்கிரஸுக்குச் சாதகம். ஆனால், தேசிய அளவில் அதற்குக் கடும் எதிர்ப்பு!
2026 மே 6 அன்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாத்யூ குழல்நாடன், SIR நடவடிக்கையின் மூலம் கேரள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதால், தங்களது ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு தேர்தலில் நன்மை ஏற்பட்டதாகத் தெரிவித்தார். கேரளாவில் SIR-ன் பலன்களைப் பாராட்டும் காங்கிரஸ்,
பீகாரில் நடந்த SIR-க்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஒரு மாநிலத்தில் வாக்காளர் பட்டியலைச் சீரமைப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்றால், மற்றொரு மாநிலத்தில் அதே நோக்கத்திலான நடவடிக்கை எப்படி ஆட்சேபனைக்குரியதாகிறது? இங்கே தான் காங்கிராஸ் கட்சியின் இரட்டை முகம் வெளிப்படுகிறது. அது தேர்தலில் வெற்றி பெறும் போது மட்டும் ஜனநாயக ரீதியாக தேர்தல் நல்ல முறையில் நடந்தது. அதே சமயம் தோல்வியடைந்தால் தேர்தல் ஆணையத்தின் சீர்திருத்தங்களை குறை கூறி கூப்பாடு போட வேண்டும்! இந்த நேர்மையற்ற செயலைத்தான் அது காலகாலமாக செய்து வருகிறது.
பீகார் தலைமைத் தேர்தல் அதிகாரியின் கூற்றுப்படி, சமீபத்திய தேர்தலுக்கு முன்பாக சுமார் 89 லட்சம் பெயர்களை நீக்கக் கோரி காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களே கடிதங்களைச் சமர்ப்பித்திருந்தனர். இவை முறைகேடுகள் தொடர்பான புகார்கள் மட்டுமே என்று காங்கிரஸ் விளக்கம் அளித்தது. எனில், எந்தெந்த வாக்காளர் பெயர்களை நீக்குவதை காங்கிரஸ் ஆதரிக்கிறது? அத்தகைய நீக்கங்களுக்கு அது முன்வைக்கும் ஆதாரங்கள் என்ன? இதை மட்டும் காங்கிரஸால் விளக்க முடியாமல் போனது வினோதம்!
SIR நடைமுறையில் குறைகள் இருந்தால் அவற்றை ஆதாரங்களுடன் நிரூபிக்கட்டும். தகுதியுள்ள வாக்காளர்கள் விடுபட்டிருந்தால் அவர்களின் உரிமைக்காகப் போராடட்டும். அதுதான் ஒரு எதிர்க்கட்சியின் கடமை. ஆனால், சீர்திருத்தத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் அரசியல் ஆயுதமாக்கி மக்களிடையே சந்தேகத்தையும் குழப்பத்தையும் விதைப்பது ஜனநாயக பாதுகாப்பா அல்லது விரோதமா?!
பொத்தாம் பொதுவாக முறைகேடுகள் இருப்பதாகக் கூச்சலிடுவது; அவற்றைக் கண்டறியும் நடவடிக்கை வந்தால் கூண்டுக்குள் போய் பதுங்குவது — இதுதான் காங்கிரசின் கேலிக்குரிய ஒரிஜினல் முகம்! இதனை நாட்டு மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டிருப்பதனால் தான் அடுத்தடுத்து காங்கிரஸை தோல்வியில் போட்டு துவைத்து எடுக்கிறார்கள்.
இப்போது காங்கிரஸ் எதிர்கொள்ள வேண்டிய கேள்வி மிகக் கடுமையானது: தேர்தல் முறையின் நம்பகத்தன்மையை தங்களது சுய லாபங்களுக்காக சந்தேகப்படுவது அதன் நோக்கமா அல்லது SIR எதிர்ப்பின் மூலம் தேர்தல் முடிவுகளின் மீது முன்கூட்டியே அவநம்பிக்கையை உருவாக்குவது அதன் உள்நோக்கமா?! ஆக, ஜனநாயகத்தின் காவலனாக இருப்பதா அல்லது அரசியல் குழப்பத்தின் கூட்டாளியாக இருப்பதா என அதுவே தீர்மானித்துக் கொள்ளட்டும்!
ஒன்று மட்டும் சர்வ நிச்சயம்! தர்ம நியாயமும், பாஜகவால் பாரத நாட்டுக்கு விளைந்திருக்கும் நன்மைகளையும் நன்கு அறிந்த மக்கள், காங்கிரஸின் வெட்டி சலசலப்புகளுக்கோ வெற்றுச் சவுடால்களுக்கோ அச்சப்படப் போவதேயில்லை!