மாதிரி தரவு — வடிவமைப்பு முன்னோட்டம்
ஒரே நாடு
கட்டுரைகள்

மோடி அரசின் செமிகண்டக்டர் புரட்சி!

எழுதியவர்

Oreynaadu Desk

13 ஆகஸ்ட் 2026

செமிகண்டக்டர் வேஃபர் ஆய்வுசெமிகண்டக்டர் வேஃபர் ஆய்வு

மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமையும் முன்பு வரையிலும், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் சிப்களுக்கு சந்தையாகவும், சிப் வடிவமைப்புக்கான மையமாகவும் தான் இந்தியா இருந்து வந்தது. அந்த நிலையிலிருந்து பாரதப் பிரதமர் மோடியின் தலைமையில் 2014ல் ஆட்சி அமைந்ததும், முழுமையான செமிகண்டக்டர் மதிப்புச் சங்கிலியை உருவாக்கும் நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. அதாவது, சிப் வடிவமைப்பில் தொடங்கி சிலிக்கான் உற்பத்தி (Fabrication), அசெம்பிளி, சோதனை, பேக்கேஜிங், உற்பத்தி உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள் தயாரிப்பு, திறமையான மனிதவளம் ஆகிய அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த செமிகண்டக்டர் சூழலமைப்பை இன்று இந்தியா வெற்றிகரமாக உருவாக்கியிருக்கிறது.

இந்த அசகாய புரட்சி, எவ்விதம் துவங்கி எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான விளக்கமே இக்கட்டுரை.

2014 - 2020 : மின்னணு சாதனங்கள் மற்றும் மொபைல் போன் உற்பத்தி தேவைகள் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பூராவிலும் அதிகமாய் விரிவடைய, அவற்றுக்கான செமிகண்டக்டர் சிப்களுக்கான உள்நாட்டு சந்தையும் இந்தியாவில் பெரிதாக உருவானது. இதற்கான முன்னேற்பாடுகளும், திட்டங்களும் தீட்டப்பட்ட காலம் இவை.

2021 : திட்டமிட்ட தேசிய முயற்சியாக ‘Semicon India’ திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக ₹76,000 கோடி ஒதுக்கப்பட்டதுடன், தகுதி பெறும் திட்டங்களுக்கு 50% வரை நிதி ஆதரவு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

2023 : முதல் முக்கிய முதலீட்டாளர்

இந்தியாவின் புதிய செமிகண்டக்டர் உற்பத்தி வளாகம்இந்தியாவின் புதிய செமிகண்டக்டர் உற்பத்தி வளாகம்

குஜராத்தின் சானந்தில் அமைக்கப்படும் Micron நிறுவனத்தின் ATMP (Assembly, Testing, Marking & Packaging) திட்டத்திற்கு முதன்முதலாக ஒப்புதல் வழங்கப்பட்டு, அதன் பணிகள் தொடங்கப்பட்டன. இதன் முதலீடு: ₹22,516 கோடி. இங்கு 2026 பிப்ரவரி மாதம் முதல் வணிக உற்பத்தியும் ஏற்றுமதியும் தொடங்கி விட்டது.

2024 : சிலிக்கான் உற்பத்தித் திட்டங்கள் நனவாகத் தொடங்கின

குஜராத்தின் தோலேராவில் Tata-PSMC நிறுவனத்தின் சிலிக்கான் சிப் உற்பத்தி ஆலைக்கும், அசாமின் மோரிகானில் Tata TSAT நிறுவனத்தின் செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் சோதனை மையத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் தோலேராவில் ₹91,526 கோடியில் உருவாகும் இந்தியாவின் முதல் வர்த்தக சிலிக்கான் சிப் ஆலை (Silicon Fab), 2028 முதல் மாதத்திற்கு 50,000 வேஃபர்களை உற்பத்தி செய்யும். அசாமின் மோரிகானில் Tata TSAT நிறுவனம் ₹27,000 கோடியில் Flip-Chip மற்றும் SiP தொழில்நுட்பங்களுடன் தினமும் 4.8 கோடி சிப்களை உற்பத்தி செய்யும் திறனுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

2025 : தொழில்நுட்ப விரிவாக்கம்

நாட்டின் முதல் 3 நானோமீட்டர் சிப் வடிவமைப்பு மையங்களாக Silicon Carbide (SiC) தொழில்நுட்பமும், மேம்பட்ட கண்ணாடி அடித்தள (Advanced Glass Packaging) திட்டங்களும் அங்கீகரிக்கப்பட்டு தொடங்கப்பட்டன. இதையொட்டி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் சுமார் ₹4,009 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக பஞ்சாப் மற்றும் ஆந்திரபிரதேசத்திலும் செமிகண்டக்டர் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

செமிகான் இந்தியா கண்காட்சியில் பிரதமர் மோடிசெமிகான் இந்தியா கண்காட்சியில் பிரதமர் மோடி

தொழிற்சாலைகளைத் தாண்டி... பல்கலைக்கழகங்களிலும் சிக்கலான சிப் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதுவரை சுமார் 68,000 மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

105 ஸ்டார்ட்அப்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) மேம்பட்ட EDA வடிவமைப்புக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

உ.பி.-யின் ஜேவரில் HCL–Foxconn நிறுவனம் ₹3,700 கோடியில் மொபைல், லேப்டாப், கார் மற்றும் டிஸ்ப்ளே சாதனங்களுக்கான டிரைவர் சிப்களை உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்க 2025-ல் ஒப்புதல் வழங்கப்பட்டது.

2026 : உற்பத்தியும், தொடர்ச்சியான முன்னேற்றமும்

செமிகான் இந்தியா கண்காட்சி வளாகம்செமிகான் இந்தியா கண்காட்சி வளாகம்

இந்தியாவின் மூன்று நிறுவனங்கள் பெருமளவில் வணிக உற்பத்தியைத் தொடங்கின. Micron, Kaynes மற்றும் CG Semi ஆகிய நிறுவனங்கள் வணிக ரீதியிலான உற்பத்தியைத் தொடங்கியிருப்பது, இந்தத் திட்டம் அறிவிப்புகளைத் தாண்டி நடைமுறையில் வெற்றிபெற்றிருப்பதற்கான மிகத் தெளிவான ஆதாரமாகும்.

Kaynes Semicon நிறுவனம் ₹3,307 கோடி முதலீட்டில், மேம்பட்ட அறிவார்ந்த மின்சக்தி தொகுதிகளை (Advanced Intelligent Power Modules) உற்பத்தி செய்யத் தொடங்கியது. ISM திட்டத்தின் ஆதரவுடன் வணிக உற்பத்தியைத் தொடங்கிய இரண்டாவது நிறுவனம் இது.

செமிகான் 2.0 திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. முதல் கட்டத்தின் ₹76,000 கோடியைத் தொடர்ந்து ₹1,27,500 கோடி மதிப்பிலான இரண்டாம் கட்ட Semicon 2.0 திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது, இந்தத் துறையில் மத்திய அரசுக்கு உள்ள நீடித்த கொள்கை உறுதிப்பாட்டினை வெளிப்படுத்துகிறது.

அடுத்த தலைமுறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு

இந்தியாவின் முதல் 3 நானோமீட்டர் சிப் வடிவமைப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே ஆராய்ச்சிகள் நிகழ்த்தி உருவாக்கப்பட்ட DHRUV64 மற்றும் VIKRAM3201 போன்ற உள்நாட்டு செயலி (Processor) திட்டங்கள் இந்தியாவின் சுயசார்பு திறனை வலுப்படுத்துகின்றன.

சிப் தொழில்நுட்ப விளக்கக் காட்சிசிப் தொழில்நுட்ப விளக்கக் காட்சி

உலகளாவிய ஒத்துழைப்பும், மோடி அரசின் தீவிரமும்

அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இந்தியாவின் செமிகண்டக்டர் துறைக்கு தங்களது ஒத்துழைப்பை விரிவுபடுத்தியுள்ளன. மென்பொருள் வடிவமைப்பில் துவங்கிய சிலிக்கான் பயணத்தில், மோடி அரசின் 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டம் தற்போது அதன் உச்சக்கட்ட தொழில்நுட்பத்தை எட்டியுள்ளது. ஒரே ஒரு அடையாளத் தொழிற்சாலையுடன் நிற்காமல், அறிவுசார் சொத்துரிமை, இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பெருமளவு உற்பத்தி என ஒரு முழுமையான செமிகண்டக்டர் சூழலமைப்பை உருவாக்குவதே மோடி அரசின் நோக்கம்; இதில் இந்தியா அதிவேகமாக முன்னேறி வருகிறது.

இது இன்னும் முழுமையான தன்னிறைவு அல்ல. ஆனால், செமிகண்டக்டர் துறையில் இந்தியா இதுவரை உருவாக்கியிருக்கும் அடித்தளம் என்பது உலக நாடுகளே இன்று உற்று கவனிக்கும் ஒரு முன்னோக்கிய வெற்றிப்பயணம் என தாராளமாக கொண்டாடலாம்!