ஒரே நாடு
← கட்டுரைகள்

சஷ்டியில் திருச்செந்தூரில் கூடிய நாம் கார்த்திகையில் திருப்பரங்குன்றத்தில் கூடுவோம்!

எழுதியவர்

குமரிகிருஷ்ணன்

15 நவம்பர் 2026

பாரதிய ஜனதா கட்சி, பிரச்சாரப் பிரிவு, முன்னாள் மாநிலத் தலைவர்

குமரிகிருஷ்ணன் எழுதிய அனைத்துக் கட்டுரைகளும் →

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கோபுரமும், மலை உச்சியில் உள்ள தீபத்தூணும்திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கோபுரமும், மலை உச்சியில் உள்ள தீபத்தூணும்

இன்று சூர சம்ஹாரம்!

திருச்செந்தூரில் முருகக்கடவுள் ஆறு நாள் அசுரர்களோடு போர் புரிந்தார்!

தேவர்களைக் காப்பாற்றுவதற்காக இந்தப் போர் நடந்தது!

கலியுகம் 4,32,000 ஆண்டுகள்! இப்போது 5100 ஆண்டுகளைக் கடந்துள்ளோம்! முந்திய துவாபரயுகம் 8,64,000 ஆண்டுகள், அதற்கும் முந்திய திரேதாயுகம் 12,96,000 ஆண்டுகள், முதல் யுகமான கிருத யுகம் 17,28,000 ஆண்டுகள்! மொத்தம் நான்கு யுகங்களும் சேர்ந்தது சதுர்யுகம்! பல சதுர் யுகங்களின் வரலாறுதான் ஹிந்து தர்ம வரலாறு!

இந்தக் கலியுகத்திற்கும் முந்திய துவாபரயுகத்தை இதிகாசயுகம் என்று சொல்லுகிறோம்!

இதிகாசங்களில் மகாபாரதம் மட்டும்தான் துவாபர யுகத்தில் நடந்தது! ராமாயணம் அதற்கும் முந்திய திரேதா யுகத்தில் நடந்தது என்னும் கருத்தும் உள்ளது!

இதிகாச காலத்திற்கும் முற்பட்டதுதான் புராணகாலம்! முருகக்கடவுள் தேவர்களைப் பாதுகாக்கப் போரிட்ட காலம் புராண காலமாகும்!

தற்போதைய கலியுகத்தைப் பொறுத்தமட்டில் தேவர்களும் மனிதர்களும் அசுரர்களும் தனித்தனியாக இல்லை! நல்ல எண்ணம் கொண்ட நல்லவர்கள் தேவர்களாகவும் கெட்ட எண்ணம் கொண்டவர்கள் அசுரர்களாகவும் கலியுகத்தில் வாழுகிறார்கள்! தற்போது தேவர்களும் அசுரர்களும் மனிதர்களாகவே வாழுகிறார்கள்!

நல்லவர்கள் தேவ மனிதர்கள்! கெட்டவர்கள் அசுர மனிதர்கள்!

முருகக்கடவுளின் திருப்பரங்குன்ற தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கமாட்டோம்! என்று கூறுகிறவர்கள் அசுர மனிதர்களே! இத்தகையோரைத்தான், கந்தசஷ்டியான ஆறு தினங்களில் முருகக்கடவுள் அழித்தார்!

அதே வரலாற்று நிகழ்வினை முருகக்கடவுள் மீண்டும் தீபம் ஏற்ற மறுப்போர்மீது நிகழ்த்தவேண்டும் என்பதுதான் எமது கந்த சஷ்டி வேண்டுதலாகும்!

இந்த பிரார்த்தனை நிறைவேற்றத்திற்காக, வரும் கார்த்திகை தீபத்திருநாளில்-

கந்தசஷ்டியில் திருச்செந்தூர் கோயிலில் கூடிய பக்தர்கள் அப்படியே திருப்பரங்குன்றத்தில் கூடவேண்டும் என்பதுதான் நமது வேண்டுகோளாகும்!