மகேஸ் கைது என்பது பங்கு பிரிக்கும் நடவடிக்கை!
எழுதியவர்
குமரிகிருஷ்ணன்
29 அக்டோபர் 2026
பாரதிய ஜனதா கட்சி, பிரச்சாரப் பிரிவு, முன்னாள் மாநிலத் தலைவர்
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைதுக்குப் பின் காவல்துறை வாகனத்தில்“முன்னாள் அமைச்சர் மகேஸ் கைது” என்பது தண்டனைக்கான கைதோ, விசாரணைக்குத் தேவைப்பட்ட கைது நடவடிக்கையோ அல்ல!
இது ஒரு பேரம் பேசும் நடவடிக்கை!
ஆட்சி அமைத்தவுடன், முக்கியமான ஊழல் ஆதாரங்கள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகளைத் திமுகவிடம் ஒப்படைத்துவிட்டது தவெக!
தமிழகத்தில் எப்போதுமே அரசியல் சம்பாத்தியத்திற்கு இரண்டு வசதியான இடங்கள் உண்டு! ஒன்று “ஆளுங்கட்சி”! இன்னொன்று “எதிர்க்கட்சி”!
மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது இடங்களெல்லாம் உண்டு! அவையெல்லாம் குறைந்த அளவிலான கூட்டணிப் பங்கீட்டுக்கான இடங்கள்! முக்கியப் பங்கீடு என்பது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும்தான்!
“இந்த இரண்டு இடங்களில் ஏதாவது ஒன்றிற்கு நாங்கள் வரவேண்டும்! இன்னொன்றில் நீங்கள் இருங்கள்! அதிமுக வேண்டாம்!” என்பதுதான் திமுகவும் தவெகவும் தேர்தலுக்கு முன்பாக ஏற்றுக்கொண்ட உடன்பாடு!
எனவேதான், அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ.க்களைத் தவெக வாங்குகிறது! திமுகவிலிருந்து வாங்குவதில்லை!
திமுகவும் தவெகவும் சேர்ந்து அதிமுகவை அழிக்கின்றன! காரணம், தமிழகத்தில் சம்பாத்தியத்திற்கு முதல் இரண்டு இடங்கள்தான் முக்கியமானவை!
இப்போது தமிழகத்தில் தவெக, திமுக கூட்டணி ஆட்சி நடக்கிறது! சம்பாதிக்கும் தொகையை எப்படிப் பங்கிடுவது? கடந்த ஐந்து ஆண்டுகளில் சம்பாதித்த தொகையில் எவ்வளவு பங்கு தவெகவுக்குத் தரப்படும்? இவை தொடர்பான பேச்சுவார்த்தை திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையில் நடக்கிறது!
பேச்சுவார்த்தையின்போது திமுகவிடமிருந்து தொகையைக் கூட்டி வாங்குவதற்கான உத்தியாகவே இந்தக் கைது நடவடிக்கை அமைந்துள்ளது! கைது நடவடிக்கையில் தவெக இறங்கிவிட்டதால், திமுக தொகையைக் கூட்டிக் கொடுக்கும்!
அப்படியும் திமுக சரிப்பட்டு வரவில்லை என்றால், கே.என். நேரு, துரைமுருகன், உதயநிதி, ஸ்டாலின் என்று கைது பட்டியலைத் தவெக நீட்டிக்கொண்டே போகும்!
“கடந்த ஐந்து ஆண்டுகளில் சம்பாதித்த ஊழல் பணத்தில், எவற்றுக்கெல்லாம் அரசிடம் ஓரளவுக்கு ஆதாரம் இருக்கிறதோ, அந்தத் தொகையில் முக்கால் பங்கைத் தவெகவிடம் தந்துவிட வேண்டும்” என்பதுதான் தவெகவின் கோரிக்கை எனத் தெரியவருகிறது!
மகேஸ் கைது என்பது “தண்டனைச் சிறை” அல்ல! இது ஒரு விளையாட்டுக் கைது! ஒப்புக்கு ஒரு விசாரணை செய்வார்கள்! செய்யப்பட்டிருப்பது விசாரணைக் கைதுதான்! இது பேரம் பேசுவதற்கான கைதுதான்!
அவர் எத்தனை நாட்கள் சிறையில் இருப்பார் என்பதை, ஸ்டாலின், உதயநிதிக்கும் ஜோசப் தரப்பைச் சேர்ந்த ஆதவ் போன்ற நபர்களுக்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தைதான் முடிவு செய்யும்!
பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துவிட்டால், தமிழக ஜோசப் போலீசின் பிடி தளர்ந்துவிடும்! நீதிபதி விடுதலை செய்துவிடுவார்! அதுவரை புழலில் சொகுசாக இருப்பார் மகேஸ்!
இந்த உண்மை மகேசுக்குத் தெரியும்! எனவேதான் அவர் சிரித்தவாறு சிறைக்குச் சென்றுள்ளார்!
பள்ளிகளில் வாங்கியது ₹400 கோடி எனச் சொல்லப்படுவது தவறு! குறைந்தபட்சம் ₹5,000 கோடியாவது இருக்கும்! இந்தக் கைது உண்மையான ஊழல் ஒழிப்பு நடவடிக்கை என்றால், அந்த ₹5,000 கோடி எங்கே பதுக்கப்பட்டிருக்கிறது என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்க வேண்டும்!
அதையெல்லாம் சொல்ல மாட்டார்கள்! அப்படிச் சொன்னால், அந்தத் தொகை மக்களின் கஜானாவுக்குப் போய்விடுமே! அது தங்களின் கல்லாப்பெட்டிக்கு வரவேண்டும் என்பதுதான் தவெகவின் முயற்சி!
கொள்ளையடித்த மக்கள் பணத்தைத் தங்கள் பக்கம் தள்ளுவதற்காகச் சதுரங்க விளையாட்டை விளையாடுகின்றன திமுகவும் தவெகவும்! இதில் மாட்டிக்கொண்ட சிவப்புக் காய்தான் முன்னாள் அமைச்சர் மகேஸ்!
இதையெல்லாம் வேடிக்கை பார்த்து, “கைது! ஆகா! ஓகோ! ஊழல் ஒழிப்பு!” என்றெல்லாம் ஊளையிட்டு, போதையில் தள்ளாடுவதுதான் அப்பாவித் தமிழக ஜனங்கள்!
என்றுதான் உண்மையை அறிவார்கள் இந்தத் தமிழக மக்கள்?