ஒரே நாடு
← கட்டுரைகள்

'கசாப்' பாணி சதித்திட்டமும், பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் பிருந்தா குரோவரின் நரித்தனமும்!

எழுதியவர்

Oreynaadu Desk

22 அக்டோபர் 2026

இடது: 2008 மும்பை தாக்குதலின் போது கையில் சிவப்புக் கயிறுடன் அஜ்மல் கசாப்; வலது: டெல்லியில் நடந்த போராட்டம் — கோப்புப் படங்கள்இடது: 2008 மும்பை தாக்குதலின் போது கையில் சிவப்புக் கயிறுடன் அஜ்மல் கசாப்; வலது: டெல்லியில் நடந்த போராட்டம் — கோப்புப் படங்கள்

— டெல்லி சி.ஜே.பி போராட்டத்தின் பகீர் பின்னணி:

டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் கட்சியினர் பெயரால் சமீபத்தில் நடந்த போராட்டம், இளைஞர்களின் சாதாரண ஜனநாயகப் போராட்டம் அல்ல; அது இந்தியாவின் அமைதியைக் குலைக்கவும், இந்து அமைப்புகள் மீது அபாண்டமாகப் பழி சுமத்தவும் பின்னப்பட்ட ஒரு மிகப்பெரிய சதி வலை எனும் உண்மை தற்போது அம்பலமாகியுள்ளது. "பெயரில் மட்டுமல்ல, இவர்களின் புத்தியிலும் கரப்பான் பூச்சித் தனம்தான் ஊறிப்போயிருக்கிறது" என்று தேசியவாதிகள் கொந்தளிக்கும் அளவுக்கு இவர்களின் செயல்பாடுகள் அதி வில்லங்கமாகவே அமைந்துள்ளன.

'முழுமையான கசாப் எனர்ஜி': இந்துக்களைப் பலிகடாவாக்கும் கசாப் பாணி நாடகம் அரங்கேற்றம்

2008-ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலின் போது, பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாப் தன் கையில் இந்துக்கள் கட்டும் புனித சிவப்புக் கயிறை கட்டிக்கொண்டு, நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டு அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்றான். தான் கொல்லப்பட்டால், அந்தப் பழி இந்துக்கள் மீதும், "காவி பயங்கரவாதம்" என்கிற பொய்யான பிரச்சாரமாக கட்டமைக்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த நயவஞ்சகத் திட்டம்.

அதே அஜ்மல் கசாப்பின் ஈனத்தனமான பாணியைத்தான் டெல்லி போராட்டத்தில் சி.ஜே.பி கும்பல் கையில் எடுத்ததாக வாட்ஸ்அப் சாட்கள் (WhatsApp Chats) வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்த குரூப் சாட்களில், "நாம் அவர்களைப் போலவே உடை அணியலாமா? ஆமாம், 'முழுமையான கசாப் எனர்ஜி!" என்று கூச்சமே இல்லாமல் விவாதித்துள்ளனர். போராட்டத்திற்கு வரும்போது காவித் துண்டு (பக்வா கம்சா) அணிந்து வர வேண்டும், கையில் சிவப்புக் கயிறு கட்ட வேண்டும், நெற்றியில் திலகம் இட்டுக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.

போராட்டத்துக்கு முன் பகிரப்பட்டதாக வெளியான வாட்ஸ்அப் குழு உரையாடல் (தொலைபேசி எண்கள் மறைக்கப்பட்டுள்ளன)போராட்டத்துக்கு முன் பகிரப்பட்டதாக வெளியான வாட்ஸ்அப் குழு உரையாடல் (தொலைபேசி எண்கள் மறைக்கப்பட்டுள்ளன)

இதன் உள்நோக்கம் ஒன்று மட்டும் தான்… அதாவது, காவி உடையில் சென்று காவல்துறை மீது தாக்குதல் நடத்துவது, வண்டி டயர்களைப் பஞ்சர் ஆக்குவது, கலவரத்தைத் தூண்டுவது—கடைசியில் அந்த வன்முறைப் பழியை அப்படியே பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து அமைப்புகள் மீது சுமத்திவிட்டுத் தப்பிப்பது! இதற்கு உதாரணமாக போராட்ட களத்திலும் என்.எஸ்.யூ.ஐ மற்றும் சி.ஜே.பி ஆட்கள் காவித் துண்டு அணிந்து வந்து நாடகமாடிய வீடியோக்கள் வெளியாகியது. இவர்களின் இது போன்ற குயுக்தியான, கசாப் பாணி நாசக்கார அக்கிரம புத்தியை கண்டு மக்கள் கலவரமடைந்துள்ளனர்.

மேலும், போராட்ட களத்தில் முஸ்லிம்கள் யாரும் முன்வரிசையில் நிற்க வேண்டாம், இந்துக்கள் போலக் காட்சியளிப்பவர்களே முன்னால் நின்று கலவரம் செய்யட்டும் என்றும் கரப்பான்கள் வெளிப்படையான அறிவிப்பாகவே முன்வைத்த கணக்கு, நாட்டின் ஒற்றுமைக்கே வேட்டு வைக்கும் பயங்கரவாதச் செயலாக மக்களால் பேசப்பட்டு வருகிறது.

கசாப்புக்கு கருணை மனு போட்ட வழக்கறிஞர் பிருந்தா குரோவரின் கள்ள உறவு!

"இயற்கையான இளைஞர் போராட்டம்" என்று வேஷம் போடும் இந்த சி.ஜே.பி கூட்டத்தின் பின்னால் இருப்பது யார் என்று பார்த்தால், அங்கேதான் வழக்கறிஞர் பிருந்தா குரோவர் மற்றும் பிரசாந்த் பூஷன் போன்ற 'நகர்ப்புற நக்சல்'களின் ஆதரவு தலைவிரித்து ஆடுகிறது.

இது ஒரு விதமாக ஒட்டுமொத்த சூழல் மண்டலத்தையே கலங்கடிக்கும் முயற்சி!

யார் இந்த பிருந்தா குரோவர்?

166-க்கும் மேற்பட்ட அப்பாவி இந்தியர்களைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற கொடூர பயங்கரவாதி அஜ்மல் கசாப்பைத் தூக்கிலிடக் கூடாது என்றும், அவனது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரியும் கருணை மனுவில் கையெழுத்திட்ட 203 பேரில் மிக முக்கியமானவர் இந்த பிருந்தா குரோவர்! கசாப் மட்டுமல்ல, யாகூப் மேமன், அப்சல் குரு என நாட்டுக்கு எதிராகக் குண்டு வைத்த பயங்கரவாதிகளுக்காகவும், பலாத்காரக் குற்றவாளிகளுக்காகவும் நீலிக்கண்ணீர் வடிக்கும் வரலாறு கொண்டவர்தான் இந்த பெண்மணி!

இப்படிப்பட்ட பின்னணி கொண்ட பிருந்தா குரோவர்தான் இன்று சி.ஜே.பி (CJP) அமைப்பின் தலைமை வழக்கறிஞராக வலம் வருகிறார். சி.ஜே.பி தலைவர்களான அபிஜீத் திப்கே, சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டவுடன், ஜாமீனில் வெளியே வந்த அபிஜீத் திப்கே எனும் கரப்பான் நேராக ஓடியது இந்த "பிருந்தா மேடம்" வீட்டுக்குத்தான்! உச்ச நீதிமன்றத்திலும், டெல்லி உயர் நீதிமன்றத்திலும் சி.ஜே.பி-க்காக வாதாடுவதும், போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்று போராடுவதும் கூட இதே பிருந்தா குரோவர்தான்.

அம்பலமான தேசவிரோதக் கூட்டணி!

ஒரு பக்கம் போராட்டக் களத்தில் இந்துக்களை இழிவுபடுத்த 'ஃபுல் கசாப் எனர்ஜி' என்ற பெயரில் காவி வேஷம் போடும் கும்பல்; மறுபக்கம் நீதிமன்றத்தில் அவர்களைக் காப்பாற்ற, நிஜ கசாப்புக்கே கருணை மனு போட்ட வழக்கறிஞர் பிருந்தா குரோவர்! இந்த இரண்டு புள்ளிகளையும் இணைத்துப் பார்த்தால், சி.ஜே.பி என்பது மாணவர்களின் நலனுக்காக உண்டான அமைப்பு அல்ல, மாறாக இந்தியாவின் ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் இந்து சமுதாயத்தையும் சீர்குலைக்கத் துடிக்கும் தேசவிரோத சக்திகளின் கைப்பாவையே என்பது தெளிவாகிறது. டெல்லி காவல்துறையின் கிரைம் பிராஞ்ச், இவர்களின் சதி வலை மற்றும் நிதி ஆதாரங்களைத் தோண்டித் துருவி எடுத்து வருகிறது. அவை வெளி வரும் போது, இத்தகைய போலிப் புரட்சியாளர்களின் முகத்திரைகள் கிழியும் நாள் வெகு தூரத்தில் இல்லை.