ஒரே நாடு
← கட்டுரைகள்

சூப்பர் திமுக ஜோசப் விஜய் அரசுக்குக் கண்டனம்!

எழுதியவர்

எஸ்.ஆர். சேகர்

22 அக்டோபர் 2026

ஆசிரியர் மற்றும் பதிப்பாளர், ஒரே நாடு

எஸ்.ஆர். சேகர் எழுதிய அனைத்துக் கட்டுரைகளும் →

1998 கோவை குண்டுவெடிப்பு: மணல் மூட்டைகளால் சூழப்பட்ட வெடிகுண்டு கார் — ஆர்.எஸ். புரம், கோவை1998 கோவை குண்டுவெடிப்பு: மணல் மூட்டைகளால் சூழப்பட்ட வெடிகுண்டு கார் — ஆர்.எஸ். புரம், கோவை

கோவை குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் ஐந்து பேர் 60 நாள் பரோலில் விடுவிப்பு!

குண்டுவெடிப்பில் பலியானோருக்கும், காயமடைந்தோருக்கும், நிரந்தரமாக ஊனமுற்றோருக்கும் செய்யும் துரோகம் இது!

1998 பிப்ரவரி 14 அன்று கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் 12 இடங்களில் 13 குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

அரசுப் பொது மருத்துவமனை, கல்லூரிகள், பள்ளிகள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், காய்கறி மார்க்கெட், பேருந்து நிழற்குடைகள் என ஈவு இரக்கமில்லாமல் இத்தனை இடங்களில் குண்டுகள் வெடித்தன.

அரசியலுக்கும் இஸ்லாமுக்கும் சம்பந்தமே இல்லாத 56 அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள்.

கொன்றவர்கள் கொடூரமான குற்றவாளிகள், கொலைகாரர்கள், பயங்கரவாதிகள்!

மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தக் குண்டுவெடிப்பில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்ற ஐந்து பேர், சொந்தக் காரணங்களுக்காகவும் உடல்நலக் குறைவு காரணமாகவும், மனிதாபிமான அடிப்படையில் ஆறு மாதங்கள் பரோலில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்களாம்!

56 பேரைக் கொன்றது மனிதாபிமானமா?

500 பேர் காயமடைந்தது மனிதாபிமானமா?

250 பேர் நிரந்தரமாக ஊனமுற்றது மனிதாபிமானமா?

மருத்துவமனையில்கூட குண்டு வைத்தது மனிதாபிமானமா?

பள்ளிக்கூடத்தைச் சிதைத்தது மனிதாபிமானமா?

ரயில் நிலையத்திலும் பேருந்து நிலையத்திலும் காத்திருந்த அப்பாவிப் பயணிகளைக் குண்டு வைத்துக் கொன்றது மனிதாபிமானமா?

இவற்றுக்குப் பதில் சொன்னால், எந்த அடிப்படையில் இவர்கள் பரோலில் விடுவிக்கப்பட்டார்கள் என்பது தெரியும்.

சரி, விடுவிக்கப்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

2023 அக்டோபர் 23, தீபாவளிக்கு முந்தைய நாள் கோவையில் குண்டு வைத்த ஜமேசா மொபைனுக்குக் கார் கொடுத்து உதவிய முகமது சாலாவின் அப்பாதான், இந்த ஐந்து பேரில் ஒருவரான நவாப் கான்.

குண்டுவெடிப்புக்கு முன்னால் கொலை செய்யப்பட்ட காவலர் செல்வராஜைக் கொன்ற குற்றத்தில் கைதானவன்தான் முகமது அன்சாரி.

2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் சிறைச்சாலையில் கைப்பற்றப்பட்ட மொபைல் போன்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள், இவர்கள் தொடர்ந்து குண்டுவைப்புச் சதியில் ஈடுபட்டு வந்ததை நிரூபித்தன.

இப்படிச் சிறைக்குள்ளும் நாசகாரச் செயல்களைச் செய்யத் திட்டம் தீட்டியவர்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் பரோல் கொடுப்பது பாம்புக்குப் பால் வார்ப்பதுபோல் அல்லவா?

வரும் நவம்பர் 8 அன்று தீபாவளி வரப்போகிறது.

2022 அக்டோபர் 23, தீபாவளிக்கு முந்தைய நாள் கோவையில் குண்டு வெடிக்கிறது.

இந்தத் தீபாவளியில் பட்டாசு வெடிப்பதைப்போல குண்டுகளை வெடிக்கச் செய்ய, த.வெ.க. அரசின் ஜோசப் விஜய் நினைக்கிறார் போலும்!

அதற்காகத்தான் முன்கூட்டியே திட்டம் தீட்ட இவர்கள் வெளியே அனுப்பப்பட்டிருக்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது.

திமுக பயங்கரவாதிகளைத் தொடர்ந்து ஆதரித்து வந்தது.

த.வெ.க. அதிபயங்கரவாதிகளை ஆதரித்து, ‘சூப்பர் திமுக’ என்கிற பட்டத்தைப் பெறுகிறது!

குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பங்கள் சார்பாகவும்,

காயமடைந்தவர்கள் மற்றும் நிரந்தரமாக ஊனமுற்றவர்களின் குடும்பங்கள் சார்பாகவும்,

அமைதியை விரும்பும் தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும்,

குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன் என்கிற முறையிலும்,

உடனடியாக இந்த ஐந்து பயங்கரவாதிகளின் பரோலைத் திரும்பப் பெற்று, அவர்களைச் சிறையில் அடைக்குமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.