வங்கதேச மாடலில் இந்தியாவில் சதி செய்யும் CJP
எழுதியவர்
Oreynaadu Desk
23 அக்டோபர் 2026
இடது: போராட்டத்தில் முழக்கமிடும் இளம்பெண்; வலது: வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தின் போது வன்முறைக் காட்சிகள் — கோப்புப் படங்கள்நமது அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் என்ற பெயரில் அரங்கேறிய வன்முறைகளும் அராஜகங்களும், அது ஒரு சாதாரண போராட்டம் அல்ல, மாறாக வெளிநாட்டு சக்திகளால் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஆட்சி மாற்ற சதி (Regime Change Operation) என்பதைத் தெளிவாக உணர முடிந்தது. சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை எதிர்ப்பது போலத் தொடங்கிய இந்தப் போராட்டம், மிக விரைவிலேயே தேச விரோத கும்பல்களின் கைகளுக்குச் சென்று வங்கதேசத்தின் ஜனநாயகத்தையே ஒட்டுமொத்தமாக குழிதோண்டிப் புதைத்தது.
வங்கதேசத்தில் வன்முறை கும்பல் செய்த அட்டூழியங்கள் எந்த ஒரு நாகரிக சமுதாயத்தையும் வெட்கித் தலைகுனிய வைக்கும். வங்கதேசத்திற்குச் சுதந்திரம் பெற்றுத் தந்த தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிரம்மாண்டமான சிலை மீது ஏறி, சுத்தியலால் அடித்து உடைத்து, புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளினர். நாட்டின் ஜனநாயகக் கோயிலான நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்து சூறையாடினர். உச்சகட்ட இழிசெயலாக, பிரதமர் ஷேக் ஹசீனாவின் அதிகாரப்பூர்வ இல்லமான கணபவனுக்குள் நுழைந்த வன்முறையாளர்கள், அங்கிருந்த பொருட்களைக் கொள்ளையடித்ததோடு மட்டுமல்லாமல், அவரது புடவைகள் மற்றும் உள்ளாடைகளை கையில் ஏந்தியபடி வீதிகளில் உலா வந்து படு வக்கிரமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஒரு நாட்டின் பெண் பிரதமரின் தனிப்பட்ட ஆடைகளை வைத்து இப்படி அநாகரிகமாக நடந்துகொண்ட கும்பல், இவர்கள் மாணவர்கள் அல்ல, கூலிப்படையினர் என வெளி உலகிற்கு துல்லியமாய் புரிய வைத்தது.
டாக்காவில் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையை உடைக்கும் வன்முறைக் கும்பல் — ஆகஸ்ட் 2024
பிரதமர் இல்லமான கணபவனிலிருந்து புடவைகள், மீன் உள்ளிட்டவற்றைச் சூறையாடிச் செல்லும் கும்பல் — ஆகஸ்ட் 2024
இதே காலகட்டத்தில், வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களும் பரவலாக அதிகரித்தன. பதவியிலிருந்து அகற்றப்பட்ட அவாமி லீக் கட்சியின் பாரம்பரிய ஆதரவாளர்களாக இந்துக்கள் இருந்ததாக பெரும்பாலும் கருதப்பட்டதால், பல்வேறு மாவட்டங்களில் வாழ்ந்த இந்து சமூகத்தினர் கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டனர். இந்துக்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத் தீவைத்தல், கொள்ளையடித்தல், நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரித்தல், 150-க்கும் மேற்பட்ட கோயில்கள் மற்றும் துர்கா பூஜைப் பந்தல்களைச் சேதப்படுத்தி அவமதித்தல் போன்ற அநியாய சம்பவங்கள் அரங்கேறின.
வங்கதேச இந்து–பௌத்த–கிறிஸ்தவ ஒற்றுமைக் கவுன்சிலின் (Bangladesh Hindu Buddhist Christian Unity Council) தகவலின்படி, ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் உடனடியாக 2,000-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் சிறுபான்மையினரை குறிவைத்து நிகழ்ந்தன. இதனுடன், இந்து சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கட்டாயப்படுத்திப் பதவி விலகச் செய்யப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றன. வழிபாட்டுத் தலங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று இடைக்கால அரசு உறுதியளித்தது. உள்ளூர் குடிமக்களும் அவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளில் கைகோர்த்தனர். அப்படியும், கடும் நெருக்கடிகள் இந்துக்களுக்கு தொடர்ந்து அங்கே நடந்தேறியது. இந்த நெருக்கடி நிலை, அங்கு வசிக்கும் சிறுபான்மையினரின் உரிமைகளை வலியுறுத்தும் மாபெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்ததுடன், சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடமிருந்தும் கடுமையான கண்டனங்களைப் பெற்றது.
பாதுகாப்பு கோரி டாக்காவில் போராட்டம் நடத்திய வங்கதேச இந்துக்கள் — ஆகஸ்ட் 2024
இந்த சம்பவங்கள் அனைத்தும் முடிந்து சில மாதங்களுக்குப் பிறகு, இதன் பின்னணியில் இருந்த உண்மை, வெளிப்படையான ஆதாரத்தோடு வெளிச்சத்திற்கு வந்தது. அமெரிக்காவில் நடைபெற்ற கிளின்டன் அறக்கட்டளை (Clinton Global Initiative) நிகழ்ச்சியில், வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் முன்னிலையில் இந்த மாணவர் போராட்டத் தலைவர்களை மேடையேற்றிப் பாராட்டினார். வங்கதேசத்தில் நடந்த வன்முறைகள் தற்செயலானவை அல்ல, மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட சதி என்பதை அந்த மேடை நிகழ்வே உறுதி செய்தது. அந்நிய நிதியுதவியுடன் இயங்கும் இது போன்ற குழப்பவாத சக்திகள், நாட்டில் தங்களுக்குச் சாதகமான பொம்மை ஆட்சியை நிறுவவே இத்தகைய ஆட்சி மாற்ற சதிகளை அரங்கேற்றுகின்றன.
கிளின்டன் குளோபல் இனிஷியேட்டிவ் மேடையில் மாணவர் போராட்டத் தலைவர்களை அறிமுகப்படுத்தும் முகமது யூனுஸ் — செப்டம்பர் 2024
இதே பாணியிலான சதிகளைத்தான் தெற்காசியாவில் உள்ள இலங்கை மற்றும் நேபாளம் போன்ற நாடுகளிலும் அந்நிய சக்திகள் அரங்கேற்றி வருகின்றன. இலங்கையில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டதும், நேபாளத்தில் தொடர்ந்து அரசியல் நிலையற்ற தன்மையை உருவாக்குவதும் ஒரே கும்பலின் திரைக்கதைதான். இப்போது அவர்களின் பார்வை சர்வ வல்லமை படைத்த இந்தியாவின் மீது திரும்பியுள்ளது.
இந்தியாவில் இந்த அந்நிய சக்திகளின் கைப்பாவையாகச் செயல்படுவதுதான் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'. வங்கதேசத்தில் நடந்த அதே வன்முறை மற்றும் அராஜகக் காட்சிகளை இந்தியாவிலும் அரங்கேற்ற வேண்டும் என்பதே இந்த CJP கும்பலின் ரகசியத் திட்டம். அதற்காகத்தான் இந்தியாவின் தேர்தல் ஆணையம், வாக்காளர் திருத்தப் பணிகள் (SIR) மற்றும் நீதித்துறை போன்ற ஜனநாயகத் தூண்கள் மீது மக்களுக்குத் தொடர்ந்து சந்தேகத்தை விதைத்து வருகின்றனர். மக்கள் சக்தியை நம்பி நேர்மையாக தேர்தல் களத்தில் நின்று தங்களால் வெற்றி பெற முடியாது என்பதை நன்கு அறிந்த கலகக்கார கூட்டம் இது! எனவே தான், நாட்டின் தேர்தல் முறையையே கேள்விக்குறியாக்கி, போராட்டம் என்ற பெயரில் வங்கதேசத்தைப் போலவே இங்கும் வீதிகளில் கலவரத்தைத் தூண்டி ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கின்றனர். அந்நிய சக்திகளின் நிதியைப் பெற்றுக்கொண்டு, பாரதத்தின் வளர்ச்சியைத் தடுக்கத் துடிக்கும் இந்த CJP கூட்டத்தின் தேச விரோத அஜெண்டா இப்போது அம்பலமாகியுள்ளது.
மேலும், இவர்களுடன் கைகோர்த்துள்ள இடதுசாரி மாணவர் அமைப்பின் (AISA) தலைவர் நேஹா போரா, "வங்கதேசமே எங்களுக்கு வழிகாட்டி, அந்த இளைஞர்களுக்குச் செவ்வணக்கம்" எனக் கூறி, இந்தியாவிலும் 'Gen-Z' புரட்சி மூலம் ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாக அக்டோபர் மாதம் வெளியிட்ட வீடியோ, இவர்களின் ஆட்சி மாற்றச் சதித்திட்டத்தினை முழுமையாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது.
ஆனால், இலங்கை அல்லது வங்கதேசத்தில் நடந்தது போல இந்த ஆட்சி மாற்ற சதி வேலைகள் இந்தியாவில் ஒருபோதும் பலிக்காது. காரணம், இந்திய மக்கள் அரசியல் விழிப்புணர்வு அதிகம் கொண்டவர்கள். இந்த நாட்டை வளர்ச்சிப் பாதையில் யார் கொண்டு செல்கிறார்கள், யார் அந்நிய சக்திகளுக்குத் தரகர்களாகச் செயல்படுகிறார்கள் என்பதை நம் மக்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் வலிமையான, ஊழலற்ற, தேசியவாதத் தலைமையின் கீழ் இந்தியா இன்று உலக அரங்கில், மிகப் பெரிய வல்லரசாக உயர்ந்து நிற்கிறது. பாஜகவின் தேசபக்தி அரசியலும், பிரதமர் மோடியின் மீது கோடிக்கணக்கான இந்திய மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையும், இந்த CJP கும்பலின் சதிகளை வெலவெலக்கச் செய்கிறது.
எந்த ஒரு சலசலப்புக்கும் அஞ்சாமல், எந்த ஒரு அந்நிய சக்திகளின் சூழ்ச்சிவலையிலும் சிக்காமல், அஞ்சா நெஞ்சர்களாக பாரத மக்கள் பிரதமர் மோடியின் பின்னால் ஒரு எஃகு கோட்டையாகவே அணி திரண்டு நிற்கிறார்கள். இதன் காரணமாகவே எந்தவொரு அந்நிய சக்தியாலும் இந்தியாவில் ஆட்சி மாற்ற சதியை அரங்கேற்ற முடியாது. அறிவார்ந்த பாரத மக்களின் ஒன்றுபட்ட சக்தி சதிகாரர்களின் திட்டங்களை தவிடுபொடியாக்கி, அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்யும் வல்லமை படைத்தவை. இதுவே நிதர்சனமான உண்மை!