ஒரே நாடு
← கட்டுரைகள்

அசோக் சிங்கல் - சனாதன தர்மம் காத்த மாவீரர்!

எழுதியவர்

Oreynaadu Desk

15 அக்டோபர் 2026

விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கல் — கோப்புப் படம்விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கல் — கோப்புப் படம்

மாபெரும் இந்து சனாதன தர்மத்தைப் பாதுகாக்கும் இயக்கமான விசுவ ஹிந்து பரிஷத்தின் சாம்ராட், வணக்கத்திற்குரிய அசோக் சிங்க(ம்)ல் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடும் தருணம் இது.

உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் 1926 அக்டோபர்-2 அன்று மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் அசோக்சிங்கல். இவரது தந்தை மகாவீர்சிங்கல் அன்று மாவட்டத்தின் துணை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தார். உடன் பிறந்தவர்கள் சிலர் அரசின் மிக உயர் பதவியிலிருந்த படிப்பாளிகளாக இருந்தார்கள். அசோக்சிங்கலும் படித்த மேதைதான்!

இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ளாமல் முழுநேரமாக ஆர்.எஸ்.எஸ்ஸில் ஆர்வத்தோடு இணைந்தார். பிறகு, 1980-ல் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணை பொதுச்செயலாளராக பொறுப்பெடுத்துக் கொண்ட அசோக் சிங்கல், 1984-ல் அதன் பொதுச்செயலாளராக உயர்ந்தார். தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேல், அகில உலக செயல் தலைவராக இருந்து வழிகாட்டினார். தன் குடும்ப சொத்துக்களின் பெரும் பகுதியினை இயக்கப் பணிகளுக்காக வழங்கிய மாமனிதரும் இவரே!

1980களில் ராமஜென்ம பூமி மீட்புக்கான அயோத்தி ரத யாத்திரை, அயோத்தியின் சர்ச்சைக்குரிய இடத்தின் பூட்டுத்திறப்பு ஆர்பாட்டம் மட்டுமின்றி கங்கை தீர்த்தம் தாங்கிய தேச ஒற்றுமைக்கான ஏகாத்மதா ரதயாத்திரை, ஸ்ரீராமஜானகி ரதயாத்திரை. ஸ்ரீராம்சிலா பூஜன் ரதயாத்திரை, ஸ்ரீராமபாதுகை ரதயாத்திரை, இல்லம்தோறும் ஸ்ரீராமஜோதி ரதயாத்திரை மற்றும் துறவியர் ரதயாத்திரை என பல்வேறு யாத்திரைகளை நாடு முழுக்க நடத்தி மக்களிடையே ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தினார் அசோக் சிங்கல்! ராமஜென்ம பூமியின் சட்டப் போராட்டம் வரை அவரால் நடந்தேறி வெற்றியில் முடிந்ததே!

தமிழகத்திற்கும் அசோக் சிங்கலுக்கும் பிரத்யேக சிறப்பான உறவு ஒன்று உண்டு. 1981ம் ஆண்டு தென்காசி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் 200 குடும்பங்களை சார்ந்த சுமார் 800 பட்டியலின சகோதரர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள். அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி விசுவ ஹிந்து பரிஷத்திற்கு செய்தி அனுப்பி அந்த சம்பவத்திற்கு தீர்வு காணச் சொன்னார். அதன் பின் பட்டியலின மக்களின் அடிப்படைத் தேவைகளை கேட்டறிந்து அவர்கள் வழிபட பிர்லா அறக்கட்டளை சார்பில் 200 கோவில்களை தமிழகத்தில் கட்டித்தர அசோக்சிங்கல் ஏற்பாடு செய்தார்.

இவரது நூற்றாண்டு விழாவை அக்டோபர் 2 அன்று சின்ன காஞ்சிபுரத்திலும், அக்டோபர் 7 அன்று திருச்சியிலும் தமிழக விஹெச்பி தடபுடலாக கொண்டாடியது. மாவீரருக்கு ஒரே நாடு பத்திரிகையின் சிரம் தாழ்ந்த அஞ்சலிகள்!