ஒரே நாடு
← கட்டுரைகள்

தென்னகத்தில் ஒரு அயோத்தியா???!!!

எழுதியவர்

முத்துசாமி

24 நவம்பர் 2026

எழுத்தாளர், RSS

முத்துசாமி எழுதிய அனைத்துக் கட்டுரைகளும் →

திருப்பரங்குன்றம் மலையும், அதன் அடிவாரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் கோபுரமும்திருப்பரங்குன்றம் மலையும், அதன் அடிவாரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் கோபுரமும்

அதாவது தற்போது ஆறுபடை வீடுகளில் முதன்மையான வீடான திருப்பரங்குன்றத்தின் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீபத்தூணின் மீது தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஹிந்துக்களுக்கு நீண்ட நாட்களாக இருந்துவருகிறது. அதற்கான பல கட்டப் போராட்டங்கள் எல்லாம் நடத்தியும், நீதிமன்ற வழக்குகள் மூலமாகவும் அணுகப்பட்டு தற்போது உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணினிலே கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். ஆனால் தீர்ப்பு வந்த பிறகும் அதை நடைமுறைப்படுத்தாமல் சாக்குப் போக்கு சொல்லி தட்டிக் கழித்து வருகிறார்கள். அது பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்ற பொழுது பல முரண்பாடான கருத்துக்களை கூறுகின்ற ஹிந்து விரோத சக்திகள் சொல்லுகின்ற ஒரு விஷயம் என்னவென்றால் இதனை தென்னகத்தில் தமிழகத்தில் இன்னொரு அயோத்தியா போன்று சூழ்நிலையை உருவாக்க முயற்சி செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை மக்கள் மன்றத்தில் முன் வைத்து வருகின்றார்கள்.

ஆனால் அந்த நோக்கத்தில் இந்த விஷயம் முன்னெடுக்கப்படவில்லை என்பதே உண்மை. சாமானிய ஹிந்துக்களினுடைய நீண்டகால உணர்வுபூர்வமான கோரிக்கையை தட்டிக் கழிப்பதற்காக சொல்லப்படுகின்ற ஒரு ஜால்ஜாபுதான் இது.

உண்மையில் யோசித்துப் பார்த்தால் இதுவும் கூட அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமியினுடைய வரலாற்றோடு திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற வேண்டும் என்கின்ற போராட்டத்தின் வரலாறும் ஒன்று போன்றே ஒத்து இருக்கிறது. அவர்கள் சொல்வது கூட ஒரு வகையில் உண்மைதான் என்பது போலத்தான் தோன்றுகிறது. ஏன் என்று சொன்னால் நமது பாரத நாட்டை ஆதிக்கம் செலுத்த வந்த அந்நிய ஆங்கிலேயன் இங்கு தனக்கு எதிராக ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து போராடியதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. போராட்டத்தை நீர்த்து போகச் செய்வதற்காக ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டான். அந்த திட்டத்தினை கடந்த நூற்றாண்டினுடைய துவக்கத்தில் இருந்தே துவக்கினான். குறிப்பாக வங்காள மாகாணத்தை மேற்கு வங்கம் கிழக்கு வங்கம் என்று மதரீதியாக பிரித்து அங்கே ஒரு இஸ்லாமிய ஹிந்து பிரிவினை மனப்பான்மையை விதைக்க முயற்சி பண்ணினான்.

ஆனால் அன்றைய தேச பக்தர்கள் அனைவரும் இணைந்து பாரத நாடு முழுமையாக ஒருங்கிணைந்து போராடியதின் மூலம் அந்த பிரிவினையை பின்வாங்கச் செய்தனர். ஆனாலும் கூட ஆங்கிலேயனுடைய அந்த சூழ்ச்சியான பிரித்தாளும் எண்ணமானது தொடர்ச்சியினுடைய ஒரு பங்காகத்தான் அயோத்தியிலும் சரி திருப்பரங்குன்றத்திலும் சரி அந்த பிரித்தாளக்கூடிய சூழ்நிலையை உருவாக்கினான்.

அயோத்தியில் ஸ்ரீ இராம ஜென்ம பூமியில் மிகப்பிரமாண்டமான ஸ்ரீ இராமர் கோயில் இருந்தது. 1528-ல் ஆக்கிரமிக்க வந்த பாபர் என்ற அந்நியன் தனது வெற்றியின் நினைவுச் சின்னமாக அயோத்தியில் இருந்து ஸ்ரீ ராமஜன்ம பூமி ஆலயத்தை தகர்த்துவிட்டு தனது வெற்றியின் நினைவுச் சின்னமாக ஒரு மசூதியை எழுப்பினான். அதைத் தொடர்ந்து 76 முறை ஹிந்துக்கள் அவ்விடத்தை மீட்பதற்காக யுத்தம் செய்திருக்கிறார்கள். 3.30 லட்சத்திற்கு மேலான இந்துக்கள் வீர மரணம் அடைந்திருக்கிறார்கள். 1932-ல் அங்கிருந்த கட்டிடம் முழுமையாக அகற்றப்பட்டது. ஆனால் பிரித்தாளும் எண்ணம் கொண்ட ஆங்கிலேயன் அயோத்தி மற்றும் பைசாபாத் நகரங்களில் இருந்த ஹிந்துக்களிடம் தண்டல் வசூல் செய்து மசூதி போன்ற ஒரு கட்டமைப்பை கட்டி இஸ்லாமியர்களுக்காக கொடுத்தான்.

ஆனால் 1934-இல் இருந்து அங்கு முஸ்லிம்கள் எவரும் தொழுகை நடத்த செல்லவில்லை. சுதந்திரத்திற்கு பிறகு ஸ்ரீ ராமஜென்ம பூமி மீட்கப்பட வேண்டும் என்று ஹிந்துக்கள் போராடிய பொழுது அப்பொழுது ஆட்சியில் இருந்த நேரு அவர்கள் அதைத் தடுத்து பூட்டு போட்டார். தொடர்ந்து போராட்டத்தின் விளைவாகவும் நீதிமன்றத்தின் மூலமாகவும் செயல்பட்டதன் விளைவாக நீதிமன்ற தீர்ப்போடு தற்போது அங்கே மிகப் பிரமாண்டமான ஸ்ரீ ராமர் ஆலயம் எழும்பியுள்ளது.

ஆனால் இதற்கிடையே ஹிந்துக்களின் தன்மான சின்னம் மீட்கப்படக் கூடாது என்பதற்காக அரசியல் கட்சிகள் அறிவு ஜீவிகள் என்று அனைவருமே ஓரணியில் நின்று எதிர்த்தார்கள். அதையெல்லாம் மீட்டு மக்கள் எழுச்சியோடும் உச்சநீதிமன்ற தீர்ப்போடும் கூட அங்கு ஆலயம் எழும்பி உள்ளது.

அது போன்றே திருப்பரங்குன்றத்திற்கு வந்தோம் என்று சொன்னால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தே திருப்பரங்குன்றம் என்பது கந்தர் மலை என்று அழைக்கப்பட்டு வந்தது. அங்கு முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகளில் முதல் வீடான முருகப்பெருமானுடைய ஆலயம் இருக்கிறது. அந்த ஆலயத்தின் மீது திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் இருக்கின்ற தீபத்தூணில் வருடா வருடம் கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபடக்கூடிய மரபானது தொன்றுதொட்டு நடந்து வந்துள்ளது. ஆனால் தென்னகத்தை ஆக்கிரமிக்க வந்த மாலிகாபூரின் தளபதியான சிக்கந்தர் என்பவன் அம்மலையை தகர்க்க நினைக்கின்ற பொழுது குமாரகம்பண்ணா என்கின்ற ஹிந்து அரசன் அவனை தோற்கடித்தார். தப்பிச்சென்ற சிக்கந்தர் திருப்பரங்குன்றம் மலை மீது ஒளிந்திருந்ததை அறிந்து அங்கேயே சென்று சிக்கந்தரை குமாரகம்பன் வீழ்த்தினார். அதன்பிறகு அம்மலையின் மீது ஐக்கியமாகியிருந்த சித்தர் உடைய சமாதி இருந்தது. அதையே தற்போது சிக்கந்தரின் தர்கா என்று சொல்லி இஸ்லாமியர்கள் பயன்படுத்தி வந்தனர். 1920-களில் மலையின் மீது தீபம் ஏற்றுவதில் பிரச்சனை ஏற்பட்ட பொழுது ஆங்கிலேயன் அதை பயன்படுத்தி தீபம் ஏற்ற விடாமல் செய்து விட்டான். ஆனால் அதற்காக வழக்கு நடந்த போது அது திருப்பரங்குன்றம் மலை முழுவதுமே முருகனுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வந்திருக்கிறது. ஆனாலும் கூட அங்கு தீபம் ஏற்றி விடக்கூடாது என்பதனை ஆங்கிலேயன் தடுத்து விட்டான். சுதந்திரத்திற்கு முன்பாக இரண்டாம் உலகப் போர் முடிந்த சூழ்நிலையை காரணம் காட்டி மீண்டும் தீபம் ஏற்ற விடாமல் செய்து விட்டான். சுதந்திரத்திற்கு பிறகு அப்பகுதிவாழ் மக்கள் மீண்டும் ஏற்ற வேண்டும் என்று முயற்சிக்கின்ற பொழுது தற்போதைய ஆளுங்கட்சிகள் அரசியல் கட்சிகள் எல்லாம் அதை தடுத்தே வந்திருக்கின்றன. தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய மதுரை கிளை பல ஆய்வுகளுக்குப் பிறகு அந்த தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பு கொடுத்த பிறகும் கூட வாக்கு வங்கி அரசியலுக்காக தீபம் ஏற்றாது தவிர்க்கிறது அறநிலையத்துறை.

நீதிமன்ற உத்தரவை கூட மதிக்காமல் ஹிந்து உணர்வுகளை மதிக்காமல் வாக்கு வங்கி அரசியலிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. ஆக இந்துக்கள் உடைய புனித இடமான திருப்பரங்குன்றத்தை ஆக்கிரமிக்க வந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துவதும், அதை பயன்படுத்தி அந்நிய ஆங்கிலேயன் பிரித்தாளும் சூழ்ச்சி செய்வதும் சுதந்திரத்திற்கு பிறகும் அதே பாதையில் ஆட்சிக்கு வருகின்ற அரசியல் கட்சிகள் நடத்துவதும் அயோத்தியை போன்றே திருப்பரங்குன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

எவ்வாறு அயோத்தி நிகழ்வு மக்கள் மத்தியில் ஒரு பெரியதொரு எழுச்சியை ஏற்படுத்தி தேசத்தின் வரலாற்றில் அரசியல் ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் தேசம் முழுக்க மாற்றத்தை உருவாக்கியதோ, அதுபோன்றே தமிழகத்தில் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுகின்ற பிரச்சனை மக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கி அதன் மூலமாக தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கும் சூழ்நிலை உருவாகிறது. இதற்கு எதிராக நிற்கின்ற அரசியல் கட்சிகளும் அறநிலையத்துறையும் இன்றைய அரசாங்கமுமே காரணம். இன்னொரு அயோத்தியாக மாறுவதற்கு காரணமாக விளங்குவது அறநிலையத்துறையும் இன்றைய அரசாங்கமும் தான் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.