உயரிய விருது பெற்ற பிரதமர் மோடிக்கு, மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

பல்வேறு நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு ரஷ்ய குடிமகனுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘‘ஆர்டர் ஆப் செயிண்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர்’ விருதை அதிபர் புதின் வழங்கினார். இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவதற்காக சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவின் உயரிய விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் வலைத்தளத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியிருப்பதாவது: பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள விருதுகள், உலகளவில் இந்தியாவுக்கு உள்ள செல்வாக்கையும், பிரதமர் மோடியின் பங்களிப்பையும் பிரதிபலிக்கிறது.

மேலும், இந்த விருதுகள் பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தையும், தொலைநோக்கு பார்வையையும் அங்கீகரிக்கும் விதமாக அமைந்துள்ளது. பிரதமருக்கு உலக நாடுகள் வழங்கிய பல்வேறு விருதுகளையும் எக்ஸ் வலைத்தளத்தில் பட்டியலிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top