ரஷ்யாவின் உயரிய விருது பெற்ற ஒரே பிரதமர் நரேந்திர மோடி!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைபயணமாக கடந்த ஜூலை 8ம் தேதி மாஸ்கோ சென்றடைந்தார். விமான நிலையம் சென்றடைந்த அவரை அந்நாட்டு துணைப் பிரதமர் டெனிஸ் மான்டுரோவ் வரவேற்றார். பின்னர் அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி ராணுவ மரியாதையும் சிவப்புகம்பள வரவேற்பும் வழங்கப்பட்டது.

மாஸ்கோ விமான நிலையம் சென்றடைந்த அவர், அங்கிருந்து புதினின் நோவோ-ஓகாரியோவோவில் உள்ள அதிபர் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை அதிபர் புதின் வரவேற்று அழைத்துச்சென்றார்.

ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருதான “ஆர்டர் ஆப் செயிண்ட் ஆன்ட்ரூ தி அப்போஸ்தலர்” விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. ரஷ்யா- இந்தியா இடையேயான உறவை மேம்படுத்த மோடியின் அளப்பறிய பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது. இந்த விருதினை பிரதமர் மோடிக்கு, அதிபர் புதின் அணிவித்து கவுரவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா – ரஷ்யா உறவு வலுப்பெற்றுள்ளது என்று புதின் கூறினார். ரஷ்ய நாட்டின் உயரிய விருதை பெற்றிருப்பது 140 கோடி மக்களுக்கு பெருமை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளர்.

இந்த விருது 300 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியத் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி ஒருவரே எனக்கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top