ஆம் ஆத்மி கட்சியின் மாநில நிர்வாகிகள், தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்!

ஆம் ஆத்மி கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் தலைவர் டி.கே.தமிழ்நெஞ்சம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தங்களை கட்சியில் பாஜக வில் இணைத்துக்கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதுகுறித்து தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்றைய தினம், தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் தலைவர் திரு டி.கே.தமிழ்நெஞ்சம், அவர்கள் தலைமையில் தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆளுமைத் திறனாலும், தலைமைப் பண்பாலும் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அவர்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்வதோடு, வலிமையான பாரதம், வளர்ச்சியடைந்த தமிழகம் என்ற நமது குறிக்கோளை நோக்கி அயராது உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top