மதரஸா பள்ளியில் படித்த ஆண் குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற மத குருமார்கள் இருவர் அதிரடி கைது!

உத்தர பிரதேச மாநிலத்தில் 9 வயது ஆண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மதரஸா குருமார்கள் இரண்டு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேசம் மல்வான் காவல் நிலையப் பகுதியில், ஜூன் 30, 2024 அன்று பிற்பகலில், ஒரு பெண் தனது 9 வயது குழந்தை ஜூன் 29 முதல் காணவில்லை என்று காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதனிடையே சௌராவின் குளத்தின் கரையில் குழந்தையின் செருப்புகள் கண்டெடுக்கப்பட்டன. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குளம் மற்றும் அருகில் உள்ள கிணற்றில் சோதனையிட்டபோது, குழந்தையின் உடல் சாக்கு மூட்டையில் கிடந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த விவரங்களின் அடிப்படையில் மதரஸாவின் இரண்டு மதகுருமார்களான ரகிமுதீன் மற்றும் தில்நவாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், செல்லோ டேப் மற்றும் கயிறு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தையை பலாத்காரம் செய்யப்பட்ட அறிகுறிகளை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில்  மௌல்வி என்ற நபர்தான் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. அவரது உறவினர் சடலத்தை மறைக்க உதவியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட மௌல்வி செல்போனில் ஆபாசப் படங்கள் பார்ப்பதற்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது. இது போன்ற ஆபாசப்படங்களை பார்த்துதான் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மதரஸாவை நடத்தி வந்தனர். அந்தக் குழந்தையும் அதே மதரஸாவில்படிக்கும் குழந்தை என தெரியவந்துள்ளது.

மதரஸாவில் படிக்க வரும் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து கொலை செய்த சம்பவம் உபியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உபியில் தற்போது பாஜக தலைமையிலான யோகி ஆதித்யநாத் ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டம், ஒழுங்கை மீறுபவர்கள் மற்றும் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் போலீசாருக்கு முழு அதிகாரம் வழங்கி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top