பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் பெண்!

பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட உமா குமரன் என்ற தமிழ்ப்பெண் வெற்றி பெற்று எம்.பி., ஆகியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இவர், அந்நாட்டின் ஸ்டான்போர்ட் அண்ட் பவ் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு, 19,145 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழ் பெண் என்ற பெருமையை உமா குமரன் பெற்றுள்ளார். அவருக்கு லண்டன் தமிழ்ச் சமூக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இலங்கையில் வசித்த இவரது பெற்றோர், இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்தனர். லண்டனில் பிறந்த உமா குமரன், அரசியல் இளநிலை பட்டம் பெற்றார். 2020 ல் கெய்ர் ஸ்டார்மரின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துணை இயக்குநராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top