டி20 உலக கோப்பை வெற்றி.. இந்திய அணி வீரர்களை நேரில் வாழ்த்திய பிரதமர் மோடி!

டி20 உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்தளித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. பார்படாஸில் இருந்து இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் நேற்று இந்தியா புறப்பட்ட நிலையில், இன்று காலை இந்திய அணி வீரர்கள் டெல்லி வந்தடைந்தனர்.

கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் அதிகாலை முதலே டெல்லி விமான நிலையம் வரத் துவங்கினர். இதனிடையே விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

 இந்திய அணி வீரர்கள் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அங்கு விருந்தளித்து கவுரவித்தார். மேலும் பிரதமர் மோடியுடன் வீரர்கள் குரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதனை தொடர்ந்து இன்று மாலை மும்பையில் இந்திய வீரர்கள் பேரணியாக, திறந்த வெளி பஸ்ஸில் டி20 உலகக்கோப்பையுடன் வலம் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top