எம்.பி., வெங்கடேசன் பேச்சு தமிழகத்துக்கு அவமானம்: சாந்தலிங்க மருதாச்சல அடிகளார்!

மதுரை தொகுதியின் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி., வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் பேசும் போது செங்கோல் வைக்கப்பட்டதுகுறித்தும், தமிழ் மன்னர்கள் மற்றும் பெண்களையும் கொச்சைப்படுத்தும் வகையிலும் பேசியிருந்தார். அவருக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பேரூர் ஆதீனத்தின் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் கூறியிருப்பதாவது;

பிற மாநிலத்தில் உள்ளவர்கள் கூட பேசலாம், ஆனால் நம்முடைய மாநிலத்திலேயே இருந்து கொண்டு நமது மாநிலத்திற்கு பெருமை சேர்க்கக்கூடியதை ஆபாசமாக சித்தரித்து சொல்லியிருப்பது மிகவும் வருத்தத்தக்க செயல் ஆகும். இந்தச் செயல் அவருடைய சிந்தனை குறுகலாக இருப்பதைக் காட்டுகிறது. அது மட்டுமல்ல இறை நம்பிக்கை இல்லாதவர்கள்தான் கேரளாவிலும் ஆட்சி செய்கிறார்கள். ஆனால் அவர்கள் சங்கரரை பற்றியோ, அவரை பற்றியதாக இருக்கக்கூடிய எந்த ஒரு செய்தியையும் அவர்கள் சொல்லுவதில்லை. தவறாகவும் சொல்வதில்லை.

ஏன் என்றால் சங்கரர் இறை நம்பிக்கை உடையவர் என்றிருந்தாலும் கூட அவரின் மண்ணின் மைந்தன் என்பதற்காக மதித்து போற்றுகின்றார்கள்.

ஆனால் தமிழகம்தான் தரம்கெட்ட நிலையில் இருந்துக்கொண்டு இந்த மாதிரி இருக்கக்கூடிய செய்திகளை எல்லாம் நாம் முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இது அவருக்கு அவமானம் அல்ல, (வெங்கடேசன்) தமிழ்நாட்டிற்கு  அவர் வாங்கித்தந்த அவமானம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு பேரூர் ஆதீனம் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top