ஸ்டாலினிடம் சொல்லுங்கள்: திருமாவளவனின் மதுவிலக்கு கோரிக்கைக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

நாடு முழுதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக எம்.பி., திருமாவளவன் மக்களவையில் பேசியதற்கு பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லுங்கள்’ என தெரிவித்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து, சிதம்பரம் தொகுதி எம்.பி., திருமாவளவன் நேற்று (ஜூலை 02) பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்யும் மத்திய அரசு, மது ஒழிப்பை பற்றி கண்டு கொள்ளவில்லை. இந்திய அளவில் இளம் தலைமுறையினர் பாழாகி வருவதை எண்ணி வேதனை அடைகிறேன்.

மத்திய அரசுக்கு இந்த வேதனை இருக்கிறதா என்று தெரியவில்லை. போதைப் பொருள் குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமின்றி, நாடு முழுதும் தாராளமாக கிடைக்கின்றன; கள்ளச் சாராயமும் காய்ச்சி விற்கப்படுகிறது. ஆகவே, இந்திய அளவில் பூரண மதுவிலக்கை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

தேசிய அளவில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துவதை வரவேற்கிறேன். ஆனால், திருமாவளவன் கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க., தான் தமிழகத்தை ஆள்கிறது. அங்கே தான், கள்ளச்சாராயம் அருந்தி 56 பேர் சமீபத்தில் உயிரிழந்துள்ளனர்.

நாடாளுமன்றத்திற்கு வந்து, மத்திய அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கு முன், தமிழக முதல்வருக்கு வழங்குங்கள். போதைப் பொருட்கள் நடமாட்டம் தமிழகத்தில் தான் அதிகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top