ஜெட் வேகத்தில் உயர்ந்த யுபிஐ பயன்பாடு : கடந்த ஆண்டை காட்டிலும் 49 சதவீதம் உயர்வு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தற்போது ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. சாதாரண பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால்கள் வரையில் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) அடிப்படையிலான பரிவர்த்தனைகள் ஜூன் மாதத்தில் 13.89 கோடியை எட்டியுள்ளன. இது கடந்த ஜூன் ஆண்டை காட்டிலும் (YoY) 49 சதவீதம் உயர்ந்துள்ளது என்று தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) தரவு மூலம் தெரிய வந்தது.

அதன்படி ஜூன் மாதத்தில் பரிவர்த்தனை அளவு ரூ.20.07 லட்சம் கோடியாகும். இதுவே மே மாதத்தில் பரிவர்த்தனை அளவு ரூ.20.45 லட்சம் கோடியாக இருந்தது. இது மே மாதத்தை காட்டிலும் ஜூன் மாதத்தில் 1.9 சதவீதம் குறைவாகும்.

ஜூன் மாதத்தில் சராசரியாக தினசரி பரிவர்த்தனை தொகை ரூ. 66,903 கோடியை எட்டியது. இதில் தினசரி பரிவர்த்தனை எண்ணிக்கை 46.3 கோடி. இது 2016-ம் ஆண்டு UPI நடைமுறைக்கு வந்ததில் இருந்து, மே மாதத்தில் UPI எண்கள் மதிப்பு மற்றும் பரிவர்த்தனை எண்ணிக்கை அடிப்படையில் அதிகபட்சமாகும்.

ஜூன் மாதத்தில், உடனடி பணம் செலுத்தும் சேவை (IMPS) பரிவர்த்தனை அளவு மே மாதத்தை (55.8 கோடி) ஒப்பிடும் போது ஜூன் மாதத்தில் 7 சதவீதம் (51.7 கோடி) குறைந்துள்ளது.

ஆதார் கார்டை வைத்து பணம் பரிவர்த்தனை முறையில் (AePS) மே மாதத்தில் 9 கோடி, ஏப்ரல் மாதத்தில் 9.5 கோடியில் இருந்து ஜூன் மாதத்தில் 11 சதவீதம் அதிகரித்து 10 கோடியாக உயர்ந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top