இலங்கை தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர் இரா.சம்பந்தன்: தலைவர் அண்ணாமலை!

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர் ஐயா இரா.சம்பந்தன். அவரது மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

இலங்கையில், தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவரான, ஐயா இரா.சம்பந்தன் அவர்கள், வயது மூப்பின் காரணமாக காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியவர்.

ஐயா இரா.சம்பந்தன் அவர்கள் குடும்பத்தினருக்கும், ஈழத்தமிழ் சொந்தங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி !

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top