திமுக எம்.பி.,க்கள் கொத்தடிமைகள்: தலைவர் அண்ணாமலை தாக்கு!

‛நாடாளுமன்றத்தில் பதவி ஏற்கும்போது ‛‛ஸ்டாலின் வாழ்க, உதயநிதி வாழ்க’’ என கோஷமிட்ட திமுக எம்.பி.,க்கள் கொத்தடிமைகள்’’ என செய்தியாளர் சந்திப்பில் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

‘சிலம்பு செல்வர்’ ம.பொ.சியின் 117வது பிறந்தநாளையொட்டி சென்னை தி.நகரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசும் போது “நாடாளுமன்றத்தில் பதவியேற்கும் போது, ஸ்டாலின் வாழ்க, உதயநிதி வாழ்க என கோஷங்களை எழுப்பி  திமுக எம்.பி.,க்கள் உறுதிமொழி வாசித்து பதவி ஏற்றுக்  கொண்டனரே?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு தலைவர் அண்ணாமலை கூறியதாவது:

திமுக எம்.பி.க்கள் கொத்தடிமைகள். நாங்கள் எங்களால் முடிந்ததை மக்களுக்கு கொண்டு செல்கிறோம். திமுக தவறு செய்யும் போது மக்கள் விழித்துப் பார்க்க வேண்டும். மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.

தி.மு.க ஆட்சியில் சட்ட ஒழுங்கு மோசம் அடைந்து விட்டது. மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எங்கள் பணிகளை செய்து கொண்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

சிறந்த தமிழறிஞரும், சிலப்பதிகாரத்தின் புகழை முதலில் பரப்பிய பெருமைக்குரியவருமான ஐயா ம.பொ.சி. அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் ஐயா ம.பொ.சி. அவர்களின் குடும்பத்தாருடன், சென்னை தி.நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து வணங்கினோம்.

சுதந்திரப் போராட்ட வீரர். மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, சென்னை, திருத்தணி உள்ளிட்ட பகுதிகள் தமிழகத்துடன் இணைந்திருக்கப் பல போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர். சிலப்பதிகார உரை, மற்றும் பாரதியார், வ.உ.சி., வள்ளலார், திருவள்ளுவர், கட்டபொம்மன் எனதமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்களின் புகழினை விளக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளவர்.

ஐயா வ.உ.சி. அவர்களுக்குக் கப்பலோட்டிய தமிழன் என்று புகழாரம் சூட்டிப் பெருமைப்படுத்திய சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top