தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முதல் எம்.எல்.ஏ., வேலாயுதம் அண்மையில் காலமானார். அவரது புஷ்பாஞ்சலி கூட்டம் சென்னை, தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நேற்று (ஜூன் 25) மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

இதில், விஸ்வ ஹிந்து பரிஷத், அகில பாரத இணை பொதுச் செயலாளர் கோ.ஸ்தாணுமாலயன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில அமைப்பு பொதுசெயலாளர் கேசவ வினாயகன், ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளர் பிரஷோப குமார், ஆர்.எஸ்.எஸ். மாநில இணை மக்கள் தொடர்பாளர் இராம.இராஜசேகர், இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் சி.பரமேஸ்வரன், ஹிந்து தர்ம வித்யாபீடம் மாநில அமைப்பாளர் திருமதி. கீதா சுந்தர், தமிழ்நாடு சேவாபாரதி மாநில தலைவர் வழக்கறிஞர் ரபு மனோகர் மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று வேலாயுதம் அவர்கள்  உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Scroll to Top